பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடலுதல்

60

உட்கோட்டம்


உடலுதல் = கோபித்தல், வருத்தல், பகைத்தல், சண்டை செய்தல், மாறு படுதல், போர் புரிதல்
உடல் = மாறுபாடு, பொருள், காரணம், உடம்பு, பொன்
உடலுநர் = பகைவர்
உடறுதல் = கோபித்தல்
உடற்கரித்தல் = தோள் தட்டுதல்
உடற்குறை = கவந்தம், தலையற்ற உடல்
உடற்கூறு = உடல் இலக்கணம்
உடற்சி = சினம்
உடற்றல் = வருத்துதல்,சீறுதல், சண்டை செய்தல்
உடன்கட்டை ஏறுதல் = கணவனுடன் மனைவியும் தீயுள் புகுதல்
உடன்றல் = கோபித்தல், சண்டை செய்தல், போர்
உடு = அகழி, அம்பு, அம்புத்தலை, நட்சத்திரம், ஓடக்கோல், ஆடு
உடுக்கு = இடை, சுருங்கிய பறை, உடுக்கை, ஆடை
உடுபதம் = வானம்
உடுபதி = சந்திரன்
உடுபம் = தெப்பம்
உடுபன் = சந்திரன்
உடுப்பகை = சூரியன்
உடுவம் = அம்பின் ஈர்க்கு
உடுவை = நீர் நிலை, அகழி
உடை = வேலமரம், சீலை, உடைமை, செல்வம்
உடைகுளம் = பூராட நக்ஷத்திரம்
உடைஞாண் = அரைஞாண்
உடைதல் = தோல்வியுறல், கெடுதல், தகர்தல், கலங்குதல், சாதல், பிளத்தல், கெடுதல், நெகிழ்தல், குலைதல், தளர்தல்
உடைமணி = மேகலை, அரையணி
உடைமை = செல்வம், உடைய பொருள்
உடையர் = செல்வர்
உடையவன் = கடவுள்
உடையாள் = பார்வதி
உடைவு = உள்ளே அடங்கியுள்ள பொருள்
உட்கார் = பகைவர்
உட்கிடை = உட்கருத்து
உட்கு = பயம், வெட்கம், மிடுக்கு, மதிப்பு
உட்குதல் = பயப்படுதல், நிலை கெடுதல், வெட்கப்படுதல்
உட்கோட்டம் = மனக்கோணல்