பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழேந்திப் புலவர்

608

பூதப் பாண்டியன்


கடத் தந்தாதி, திருவேங்கட மாலை, திருவரங்கத் தூசல், 108 திருப்பதி அந்தாதி, என்பன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.

பு

புகழேந்திப் புலவர் = தொண்டை மண்டலத்தில் பொன் விளைந்த களத்தூரில் வேளாளர் மரபில் உதித்தவர். வைணவ சமயத்தினர். மதுரைப் பாண்டியனிடம் சமஸ்தானப் புலவராகத் திகழ்ந்தவர். மள்ளுவ நாட்டு மன்னனாகிய சந்திரன் சுவர்க்கியினாலும் ஆதரிக்கப்பட்டவர். நளவெண்பா என்னும் நூலைப் பாடியவர், "வெண்பாவில் புகழேந்தி" என்று சிறப்பிக்கப்பட்டவர். இரத்தினச் சுருக்கம் என்னும் நூலையும் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் பேச்சைக் கேட்டுக் குலோத்துங்கன் இவரைச் சிறையில் இட்டனர் என்றும்,அந்தத்தருணம் நங்கைமார்களின் பொருட்டு அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை புலந்திரன் களவு மாலை முதலான நூற்களைப் பாடியதாகவும் கூறுவர். காலம் 13 ஆம் நூற்றாண்டு. பல தனிப்பாடல்கள் இவர் பாடினவாகக் கருதப்படுகின்றன.

புத்தமித்திரன் = இவர் செய்த நூலே வீரசோழியம் என்பது. இது வீரசோழன் பெயரால் இயற்றப்பட்ட இலக்கண நூல். இவர் தஞ்சாவூர் மாவட்ட மிழலைக் கூற்றத்தைச் சார்ந்த பொன்பற்றி என்னும் ஊரினர். கி. பி. 11ஆம் நூற்றாண்டு.

பூ

பூதத்தாழ்வார் = இவர் முதல் ஆழ்வார்கள் மூவருள் ஒருவர். மாவலிபுரம் என்னும் திருக்கடல் மல்லை என்னும் ஊரில் குருக்கத்தி மரத்தின் கீழ்ப் பிறந்தவர். இரண்டாம் திருவந்தாதி என்னும நூலைப் பாடியவர். அது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா என்ற தலைப்பின் கீழ் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.

பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு}} = இவர் பூதப்பாண்டியன் மனைவியார். அவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி உயிர் விட்டவர். கடைச்சங்க காலத்தவர். இவரது