பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உதயகிரி

62

உத்தராசங்கம்


உதயகிரி = கிழக்கு, சூரியன் தோன்றுவதாகக் கருதப்படும் மலை
உதயம் = உதித்தல், விடியல்
உதயன் = சூரியன்
உதரக்கொதி = பசி
உதரபந்தனம் = ஒட்டியாணம், அரைப்பட்டை
உதரம் = வயிறு, கருப்பம்
உதராக்கினி = பசித்தீ
உதவகன் = தீ
உதள் = ஆடு, மேடராசி
உதாகரணம் = உதாரணம், அத்தாட்சி
உதாசனன் = அக்கினி தேவன்
உதாசீனம் = அலட்கியம், விருப்புவெறுப்பு இன்மை, இகழ்வு
உதாத்தம் = எடுத்தல் ஓசை, பெருமை
உதாரதை = பெருங்கொடை
உதாரம் = கொடை, பெருமை, மேம்பாடு, தயை
உதி = உலைத்துருத்தி, வித்தை, ஒதியமரம்
உதிட்டிரன் = தருமராஜன்
உதிதன் = தோன்றினவன்
உதிப்பு = ஞானம், தோற்றம்
உதியன் = சேரன்
உதிரி = பெரியம்மை, நோய், பிட்டு, சிறுகீரை, உதிர்ந்தது
உதிர் = துகள்
உதீசி = வடக்கு
உது = பின் உள்ளது, நடு உள்ளது
உதும்பரம் = அத்திமரம், செம்பு
உதைப்பு = பயம்
உதைமானம் = முட்டு
உத்கீதம் = சாமவேதம் பாடுதல், ஓங்காரம்
உத்கீதை = பிரணவம்
உத்கோஷித்தல் = சப்தம் செய்தல்
உத்தண்டம் = உக்கிரம், வீரம், இறுமாப்பு
உத்தமாங்கம் = தலை
உத்தரகிரியை = இறந்தபின் செய்யும் சடங்கு
உத்தரகுரு = போகபூமி
உத்தரணி = பஞ்சபாத்திரக் கரண்டி, நெய்த்துடுப்பு
உத்தரபாகம் = பின் பாதி
உத்தரபூமி = வடதேசம்
உத்தரமீன் = அருந்ததி
உத்தரம் = சேடம், மறுமொழி, வடக்கு
உத்தராசங்கம் = மூடும் போர்வை