பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உத்தராயணம்

63

உந்தை


உத்தராயணம் = சூரியன் வடதிசையாகப் போதல், தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாதகாலம்
உத்தரி = குதிரை
உத்தரியம் = மேல் ஆடை
உத்தாரணம் = உயர்த்துதல், தீங்கிநின்றும் மீளல், நிலை நிறுத்துகை, எடுத்து நிறுத்துகை
உத்தாரம் = கட்டளை, மறுமொழி
உத்தானம் = அடுப்பு,ஊழித்தீ, எழும்பல்
உத்தி = சொல், சேர்க்கை, அனுமானம், தேமல், பாம்பின் படப்பொறி, சீதேவி என்னும் தலையணி, பேச்சு
உத்தியானம் = பூந்தோட்டம், சிங்காரவனம்
உத்தியோகம் = முயற்சி, தொழில்
உத்துங்கம் = உயர்ச்சி
உத்துதல் = கழித்தல்
உத்துவாசனம் = அகற்றுதல், கொல்லுதல்
உத்தூளனம் = திருநீற்றை நீரில் குழைக்காமல் பூசிக்கொள்ளுதல்
உத்தேசம் = மதிப்பு, நோக்கம்
உத்பாதம் = பெருந்தீங்கின் வரவை அறிவிக்கும் குறி (வீழ் கொள்ளி, பூகம்பம் முதலிய நிகழ்ச்சிகளை அறிவிப்பது)
உத்பிச்சம் = விதையில் இருந்து பிறப்பது
உத்பிதம் = பூமியைப் பிளந்து வெளிவரும் செடி முதலியன
உத்ப்ரேட்சை = தற்குறிப்பேற்ற அணி
உந்தல் = உயர்ச்சி, யாழ் நரம்பு தடவுதல்
உந்தி = கொப்பூழ், வயிறு, தேர்த்தட்டு, நீர்ச்சுழி, மகளிர் விளையாட்டு, யாறு, ஆற்றிடைக் குறை உயர்ச்சி, யாழ் உறுப்பு
உந்திபறத்தல் = குதித்துக் பாடி விளையாடுதல்
உந்திபூத்தோன் = திருமால்
உந்துதல் = தள்ளுதல், எழும்புதல், ஏறுதல், செலுத்தல், வீழ்வித்தல், நகர்தல், ஒளிவீசல், எறிதல், தெறித்தல், நீங்குதல், பொருந்துதல், கொழித்தல்
உத்துரு = பெருச்சாளி
உந்துாழ் = பெரு மூங்கில்
உந்தை = உன் தந்தை