பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உபாசிதம்

65

உயா


உபாசிதம் = வணக்கம்
உபாஞ்சு = தனிமை, மந்தமாகச் செபித்தல்
உபாதானம் = பற்று, முதற்காரணம், அரிசிப்பிச்சை
உபாதி = தடை, பாதை, வருத்தம், கடமை
உபாயம் = சொற்பம், சூழ்ச்சி
உபேட்சித்தல் = அலட்சியம் பண்ணுதல், வெறுத்து விடுதல்
உபேட்சை = அசட்டை, அருவருப்பு
உபேந்திரன் = விஷ்ணு
உபோற்காதம் = ஆரம்பம், நூன்முகம், பாயிரம்
உப்பக்கம் = முதுகு
உப்பால் = மேல், புறம்பு, வெளி, மறுமை
உப்பு = இனிமை, உப்பு, எல்லை, உவர்க்கடல்
உமட்டியர் = உப்பு விற்கும் மகளிர்
உமணர் = உப்பு அரைப்பவர், உப்பு விற்பவர்
உமண்சாத்து = உப்பு வாணிகர் கூட்டம்
உமல் = ஓலைப்பை
உமாபதி = சிவன்
உமித்தல் = பதராதல், சாரமறுதல், கொப்புளங் கொள்ளுதல், அழிதல்
உமேசன் = சிவன்
உம்பர் = அப்பால், உவ்விடம், உயர்ச்சி, மேல், மேல் உலகம, தேவர், ஆகாசம்
உம்பல் = யானை, எழுச்சி, குலம், மகன், வலி, விலங்கின் ஆண்
உம்பளம் = உபகாரம், கொடை, வெகுமானம், மானிய நிலம், உப்பளம்
உம்பன் = கடவுள்
உம்மை = வருபிறப்பு, முன்பிறப்பு
உயக்கம் = வருத்தம், வாட்டம்
உயங்குதல் = வருந்துதல், வாடுதல், துவளுதல்
உயர்திணை = மேற்குலம், உயர்ந்தகுணம
உயலுதல் = அசைதல்
உயல் = தப்புதல்
உயவல் = நினைப்பு, வருத்தம்
உயவற்பெண்டிர் = கைம்பெண்கள்
உயவு = வருத்தம், பிழைக்கச் செய்யும் வழி
உயவுதல் = வருந்துதல், உசாவுதல்
உயவை = கான்யாறு, துன்பம்
உயா = வருத்தம், உசா, வினா