பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரச்சம்

66

உரலடி


உயிரச்சம் = உயிர் பொருட்டால் வரும் அச்சம்
உயிரவை = உயிர்த்தொகுதி
உயிருண்ணுதல் = பரவசப்படுத்தல், உயிர்போக்குதல்
உயிரோம்பல் = காத்தல்
உயிர் = மூச்சு, ஓசை, அழகு ஆன்மா, பிராணி, உயிர்ப்பு
உயிர்த்தல் = மூச்சு விடுத்தல், சொரிதல், இளைப்பாறுதல், போக்குதல், விசுதல், பிறத்தல், விடுதல், மோத்தல்
உயிர்த்துணை = கணவன், மனைவி
உயிர்த்துப்பு = உயிர்ப்பொருளாகிய உணவு
உயிர்த்தெழுதல் = இறந்தவன் உயிர்பெற்றெழுதல்
உயிர்நிலை = உடம்பு, உள்கருத்து
உயிர்ப்பு = காற்று, சுவாசம், இளைப்பாறுதல், நறுமணம், மூச்சு, செயலறவு
உயிர்ப்புனல் = இரத்தம்
உயிர்ப்பொறை = உடம்பு
உயிர்மருட்டல் = உயிருடையது, போல மயக்குதல்
உயிர் மருந்து = சோறு, சஞ்சீவி
உய்கை = பிழைத்தல்
உய்தல் = நீங்குதல், கழிதல், ஈடேறுதல், பிழைத்தல்
உய்தி = உயிர்வாழ்க்கை, ஈடேற்றம், நீங்குகை
உய்த்தல் = அடைவித்தல், நடத்துதல், செலுத்துதல், அனுப்புதல், அனுபவித்தல், அறிவித்தல், கொடுத்தல்
உய்த்துணர்தல் = ஆராய்ந்தறிதல்
உய்யல் = செல்லல், ஏறுதல், உய்தல்
உய்யானம் = பூந்தோட்டம்
உய்வு = ஈடேறுதல், உய்தல்
உரகம் = பாம்பு
உரகதம் = பாம்பு
உரகர் = நாகலோக வாசிகள்
உரகன் = ஆதிசேடன்
உரங்கம் = பாம்பு
உரந்தை = துன்பம்
உரப்பல் = அடரொலி
உரப்பு = திண்மை, வலி, பேர் ஒலி
உரப்புதல் = அச்சுறுத்தல், திரண்டொலித்தல்
உரமிடல் = எருபோடல்
உரம் = ஊக்கம், ஞானம், வலி, திண்ணிய அறிவு, மார்பு, எரு, திண்மை, வெற்றி, பாதுகாப்பு, சிறப்பு, மனம், மதில், சுளுக்கு
உரரல் = இடித்தல், கோபித்தல், முழங்குதல்
உரலடி = யானை