பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உருத்திராணி

68

உலகநோன்பு


உருத்திராணி = பார்வதி
உருத்திரை = பார்வதி
உருநாட்டு = சித்திரம், விக்கிரகம்
உருப்பம் = உஷ்ணம், சினம்
உருப்பு = வெப்பம், சினம், கொடுமை, மிகுதி
உருமம் = நடுப்பகல், வெப்பம்
உருமு = இடி
உருமேறு = இடி ஏறு, பேர் இடி
உரும் = அச்சம், இடி
உரும்பு = கொடுமை, கொதிப்பு
உருவ = நன்றாக
உருவகம் = உவமானத்தையும் உபமேயத்தையும் ஒன்றென்றெண்ணும்படி ஒற்றுமைப் படுத்திச் சொல்லும் ஒர் அணி
உருவம் = அழகு, உடல், நிறம், வடிவம்
உருவாரம் = வெள்ளரி
உருவிலி = மன்மதன்
உருவுடம்பு = துால சரீரம்
உருவெளி = மனோராச்சியத்தால் வெளியில் தோன்றும் போலி வடிவம்
உருளரிசி = கொத்துமல்லி
உருளாயம் = தாயத்துள் பட்ட வரவு, சூதாட்டம், உருள் கவறு
உருனி = ரோகிணி நட்சத்திரம், தேர்ச் சக்கரம், வட்டம், வட்டப் பாத்திரம்
உருள் = வண்டி, உரோகிணி, தேருருள்
உரை = புகழ், சொல், விளக்கவுரை, ஆகமப் பிரமாணம், நூல், பொன் மாற்று, அறிவுரை
உரைக்கிழத்தி = கலைமகள்
உரைதல் = தேய்தல், வீணாதல்
உரைத்தல் = ஒலித்தல், தடவல், தேய்த்தல், பூசுதல், சொல்லுதல்
உரைமுடிவு = முறைத்தீர்ப்பு
உரையாணி = பொன்னின் மாற்றறியும் ஆணி
உரோசனை = கோரோசனை
உரோசம் = கோபம், மானம்
உரோதம் = நீர்க் கரை
உரோதனம் = அழுதல்
உரோமக்கால் = மயிர்த்துளை
உரோமாஞ்சம் = மயிர் சிலிர்த்தல்
உலகநாதன் = அரசன், கடவுள்
உலகநோன்பு = துறவாது விரதம் காத்தல்