பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊட்டி

77

ஊர்த்துவகதி


ஊட்டி = பறவை யுணவு, கழுத்து, குரல்வளை, உணவு, மழை
ஊட்டு = கவளம், உணவு, உண்பித்தல்
ஊண் = உணவு, இரை, அநுபவம, உண்கை
ஊதம் = யானைக் கூட்டம்
ஊதல் = காற்று, மிகுதி
ஊதாரி = வீண் செலவு செய்வோன்,வீண்கொடையாளன்
ஊதியம் = இலாபம், பயன், கல்வி, பேறு, ஆக்கம், நன்மை
ஊதுதல் = துளைத்தல், புடமிடுதல், நுகர்தல், ஒலித்தல், வீங்குதல்
ஊதுலைக்குருகு = துருத்தி
ஊதை = காற்று, வாடை
ஊமச்சி = நத்தை
ஊமணை = பேசும் திறமை அற்றவன், அழகற்றது
ஊமன் = கோட்டான்
ஊமை = ஒருவகை வாத்தியம், குறை, கிரி
ஊமையெழுத்து = மெய்யெழுத்து
ஊம் = ஊனம்
ஊரல் = கிளிஞ்சல், ஒரு வகைப் பறவை
ஊரன் = மருதநிலத் தலைவன்
ஊராண்மை = உபகாரியாம், தன்மை, ஊரை ஆளும் தன்மை, மிக்கசெயல், ஒப்புரவு, ஊரின்கண் மேம்பாடு உடைமை
ஊரி = சங்கு, இளமை, மேகம்
ஊரு = தொடை
ஊருகால் = நத்தை, சங்கு
ஊருடையார் = ஊர்க்கணக்கர்
ஊருணி = ஊரெல்லாம் உண்ணும் குளம்
ஊரேறு = ஊர்ப் பன்றி, பட்டிமாடு
ஊர்கொண்டன்று = நிரம்புதலுற்றது
ஊர்கொள்ளுதல் = பரந்து ஒளித்தல்
ஊர்கோள் = பரிவேடம்
ஊர்ணநாபி = சிலந்திப் பூச்சி
ஊர்ணம் = நூல் இழை, ஆடு முதலியவற்றின் ரோமம்
ஊர்தல் = தவழ்தல், தினைவுறுதல், தடவுதல், செல்லுதல், பரவுதல், சஞ்சரித்தல், மேற்கொள்ளுதல், நெருங்குதல், மறைத்தல், அடர்தல், வடிதல், மிகுதல்
ஊர்தி = வாகனம் , தேர்
ஊர்த்துவகதி = மேல் நோக்கிச் செல்லுதல்