பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எடுத்தேத்து

80

எண்பக


எடுத்தேத்து = எடுத்துப் புகழ்தல்
எடுபடுதல் = அழிதல், நிலை தவறுதல்
எடுபாடு = ஆடம்பரம், குலைவு, பிரசித்தம்
எடுபிடி = முயற்சி, விருது
எடுப்பு = நிந்தை, உயர்வு, தூக்குதல், எடுத்தல்
எட்கசி = எள்ளுண்டை
எட்கிடை = எள் பிரமாணம்
எட்சத்து = எண்ணெய்
எட்சி = எழுச்சி
எட்சினி = இயக்கர் குலப்பெண், துர்கைக்கு வேலை செய்பவள்
எட்டக்கரம் = அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)
எட்டர் = அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் மங்கல பாடகர், மூடர்
எட்டி = செட்டி, ஒருபட்டம்
எட்டிப்புரவு = வாணிபத்தால் சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த நிலம்
எட்டியர் = வைசியர்
எட்டு = ஆசை, எட்டு
எட்டுணை = எள்ளளவு
எட்டேகால்லக்ஷணம் = அவலட்சணம்
எட்பிரமாணம் = எள்ளளவு
எண் = தருக்கம், சோதிடம், எள், மதிப்பு, இலக்கம், எண்ணம். கணிதம், மந்திரம், எட்டு, எளிமை, மனம், அறிவு
எண்கணன் = பிரமன்
எண்காற்புள் = சரபம், சிம்புள்
எண்கு = கரடி
எண்குணத்தான் = கடவுள், சிவன், அருகன்
எண்கோவை = காஞ்சி என்ற அரையணி
எண்சுவடி = கணக்கேடு
எண்டோளன் = சிவன்
எண்டோளி = காளி, துர்க்கை
எண்ணப்படுதல் = மதிக்கப்படுதல், கணிக்கப்படுதல்
எண்ணம் = மதிப்பு, கருத்து, ஆலோசனை, நினைவு, கவலை, சூழ்ச்சி
எண்ணர் = கணிதர், தார்க்கிகர், மந்திரிகள்
எண்ணலார் = பகைவர்
எண்ணாமை = மதியாமை
எண்ணார் = பகைவர்
எண்ணிக்கை = மதிப்பு
எண்ணூல் = தருக்க நூல், கணித நூல்
எண்ணெய்க் காப்பு = எண்ணெய் அபிடேகம்
எண்பக = அளவிறக்க