பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்பதம்

81

எமரங்கள்


எண்பதம் = எளிய சமயம்
எண்பித்தல் = மெய்ப்பித்தல்
எண்பேராயம் = அரசர்க்கு சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு,வெற்றிலை, கஞ்சுகம் நெய் முதலானவை கொடுப்பவர்; மந்திரிமார், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப்பாளர், நகர மக்கள், படைத்தலைவர், குதிரை வீரர், யானை வீரர் எனப்படும் அரசர்க்குரிய துணைவர்
எண்பொருள் = எளிதில் அடையும் பொருள்
எண்மர் = எட்டுப்பேர்
எண்மானம் = எண்ணை எழுத்தால் எழுதுதல்
எண்மை = எளிமை
எதார்த்தம் = உள்ளபடி, உண்மை
எதி = துறவி
எதிரிடை = பகை, சமம்
எதிரூன்றல் = எதிர்த்து நிற்றல்
எதிரேறு = வலி
எதிர் = போர், இலக்கு, மறுமொழி, ஒப்பு, நேர், முரண், முன்
எதிர்கழறுதல் = ஒத்தல், மாறு கூறுதல்
எதிர்தல் = தோன்றுதல், முன்னாதல், மலர்தல், மாறுபடுதல், தம்மில் கூடுதல், எதிர்த்தல், பெறுதல், கொடுத்தல், பொருந்துதல்
எதிர்ந்தோர் = பகைவர்
எதிர்ப்பை = வாங்கிய அளவு திருப்பிக்கொடுத்தல்
எதிர்முகம் = முன்னிலை மாறுபாடு
எதிர்வு = நேரிடுதல், எதிர் காலம்
எதுகை = இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, பொருத்தம்
எத்தனம் = முயற்சி, கருவி, ஆயத்தம்
எத்தன் = நன்மை கூறி வஞ்சிப்பவன்
எத்து = வஞ்சகம்
எத்துணை = எவ்வளவு
எத்துதல் = நன்மை கூறி வஞ்சித்தல்
எந்திரம் = மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்
எந்து = என்ன, எப்படி
எந்தை = என் தந்தை
எமரங்கள் = எமது சுற்றத்தார்கள்

11