பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

201

 இதனை இயற்றிய ஆசிரியர் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாண்டிநாட்டுச் செல்லி நகரினர்; பதின்மூன்றாம் நூற்றாண்டினர். 'ஹாலாஸ்ய மகாத்மியம்' என்ற வடமொழிப் புராணத்தைத் தமிழில் இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இந்நூலுக்கு ஆசிரியர் பெயர் முன்னர் அமைந்து. 'பரஞ்சோதி திருவிளையாடல்' என்று வழங்கப்படுகிறது. இந்நூல் நான்கு காண்டங்களும், அறுபத்தெட்டு படலங்களும், 3363 பாடல்களும் கொண்டது. இதுவும் வேம்பத்தூரார் திருவிளையாடலும் இறைவன் திருவிளையாடல்களைக் கூறும் முறையில் மாறுபட்டுள்ளன. ஆசிரியர் பரஞ்சோதியார், திருமறைக்காட்டில் ஆதி சைவ குலத்தில் பிறந்து மதுரைமடத்தில் தம்பிரானாய் இருந்தவர். பரஞ்சோதியார் திருவிளையாடலே இன்று நன்கு பயிலப்படுகிறது.

குணபத்திராசாரியார் என்னும் தம் குருநாதரின் கூற்றுக்கிணங்க, மண்டல புருடர் எளிய முறையில் சூடாமணி என்னும் நிகண்டு நூலை இயற்றினார் என்பதை முன்னர்க் கண்டோம். திருப்புகழ்ப் புராணம் செய்துள்ள இவர் கிருட்டிணதேவராய மன்னன் காலத்தவர். இவர் இயற்றிய சூடாமணி நிகண்டு மேலைநாட்டினர் தொடர்பால் அகராதிகள் தோன்றிய பின்னர்த் தன் செல்வாக்கை இழந்தது.

வில்லிபுத்தூரார் பாரதம்

இந்நூலின் முதன் நூல் வடமொழியிலுள்ள பாரதமாகும். பாரதக்கதை தமிழுக்குப் புதியதொன்றன்று. சங்க இலக்கியங்களிலேயே பாரதக் கதை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. கல்வெட்டொன்று மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அருணிலை விசாகர் என்பவர் பாரதத்தைத் தமிழ்ப்படுத்தியதாகக் கூறுகிறது. பாண்டவர் ஐவருடையவும் துரியோதனாதியர் நூற்றுவருடையவும் ஆன வரலாற்றை இந்நூல் கூறுகிறது. ஆதிபருவம், சபா