பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

245


பருகுமாறு பரிந்தழைக்கும் தாயுமானவர் முதலிய ஆன்றோர் பாடல்களில் உள்ள ஆர்வம் இரக்ஷணியப் பாடல்களிலும் அமைந்து நம் உள்ளத்தை அள்ளுகின்றது.[1]

வேதநாயக சாஸ்திரியார்

திருநெல்வேலி நகரில் பிறந்த இவர், பராபரன் மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம், ஞான ஏற்றப்பாட்டு என்னும் நூல்களை எழுதியுள்ளார். ஏசுநாதர் பெருமையினை விளக்கப் 'பெத்லகேம் குறவஞ்சி' என்ற நொண்டி நாடகத்தினையும் இயற்றியுள்ளார்.

வின்சுலோ

1862ஆம் ஆண்டில் ராட்லர் எழுதிய அகராதியினைப் பின்பற்றி, இவர் தமிழ் ஆங்கில அகராதியினை வெளியிட்டார்.

தமிழ்க் கவிஞர்கள்

திரிகூடராசப்பக் கவிராயர்

'குளிர் தூங்கும் குற்றாலம்' பற்றிய நூல்களை இனிமையுற இயற்றிய இவர், தென்காசிக்கருகே மேலகரத்தில் பிறந்தவர். குறவஞ்சிகளிலே தலையாயதாக எண்ணப்படுவது இவரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சியாகும். குற்றாலத் தலபுராணமும் இவர் இயற்றியதே. 'குற்றாலக் குறவஞ்சி' என்னும் நூல் இனிய சந்த அமைப்புகளோடு, எளிய சொற்களால் இயன்ற அரிய நூல். இதில் உள்ள கண்ணிகள் முதலியன கருத்தை உருக்கும் மோனை எதுகை


  1. -டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை கிறிஸ் தவத் தமிழ்த் தொண்டர் ப. 63.64.