பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் இலக்கிய வரலாறு

சுமேரிய மொழி சொல்வளம் உடையது. ஆயினும், தமிழை நோக்க அம்மொழி இளமையான பிற்பட்ட மொழியாகவே கருதப்படும் என்கிறார் அறிஞர் ஒருவர்.[1] 'வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதரோ மக்கள் திராவிட மொழியையே பேசினார்கள். அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம். ஆதலின், இப்பொழுது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப்பழமையானது என்ற கொள்கையை இக்கூற்று மேலும் வலியுறுத்தி நிற்கின்றது"[2] என்று ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழின் பழமையும் சிறப்பும் நன்கு புலனாகின்றன.


  1. The Sumerian speech old as it is, appears comparatively young, when viewed in the light of earliest World terms which Tamil displays and of which Sumerian forms are a later developement.
    - Rev. S. Gnanapragasar
  2. Being Dravidians the inhabitants of Mohenjodaro in Northern India naturally spoke a Dravidian language in which the earliast proportion of the word used are found in Tamil. This confirms the common belief that Tamil is the oldest of the present languages.
    - Rev. Heras