பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

295

வீழ்ச்சியென ஓசையெழுப்பிப் பாய்ந்து வீழ்ந்து, பட்டுத்தெறித்து ஓடுகின்றன.'

இவா் கவிதைகளில் நாட்டு விடுதலை - மாெழி வளா்ச்சி - பகுத்தறிவு நெறி - சமூகச் சீா்திருத்தம் - இயற்கையழகு - காதல் - வீரம் - கடமை பாெழுது பாேக்குப் பாேன்ற பல திறப்பட்ட பொருள்கள், கற்பனைத் திறனால் பாெலிவும் வலிவும் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுத் திகழ்கின்றன. கவிதைகளில் உவமை நயமும், சொல்லழகும் பாெருட்செறிவம் கற்பனையாேட்டமும் நெடுக நன்கு மிளிா்கின்றன.

‘உாித்த ஆரஞ்சுபாேல் உலகம் முகிழ்த்தது‘

’பிய்த்த வடைபாேன்று நிலவோன்’

‘மலைப்பெண்ணாள் முத்தாரம் அருவி‘

’குலையறுத்த வாழையைப் பாேல் நீா்பெருக்கி’

‘உாித்த முந்திாி உருவில் நடந்த முழுநிலவு‘

முதலிய கவிதைத் தாெடா்களின் உவமை நயத்தின் சிறப்பினைக் காணலாம்.

பேரறிஞா் அண்ணாவைக் கவிஞா் நாவார வருணிக்கும் நயத்தினை,

‘நெற்றியில் அறிவைத் தேக்கி
நெஞ்சத்தில் வீரம் தேக்கி
வற்றாத நாவில் நாளும்
வளமுறும் கருத்தைத் தேக்கிச்
சுற்றாமல் சுற்றும் கண்ணில்
துடிப்பினைத் தேக்கி, மண்ணி ல்
கற்றவா் திகைக்கும் வண்ணம்

காண்பவா் ஒருவா் அண்ணா!’

என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளாா்.