பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

306


சேர்ந்து புதுக்கவிதை பற்றிய ஒரு கொள்கையை ஏற்படுத்தினார்.

1. கவிதைக்குள்ளே அகமோ புறமோ எதையும் நேர்முகமாய் இயம்பவேண்டும். பொருளின் ஆன்மாவைச் சட்டெனத் தொடவேண்டும்.

2. கவிதை வெளியீட்டுக்குப் பயன்படாத ஒரு சொல்லையும் புகுத்தக்கூடாது. சொற்களைக் கூட்டினாலும் குறைத்தாலும் ஒரு படைப்பு மாறும். தெய்வத் தச்சன் ஒருவன் படைப்பு ஒன்று செய்தால் அதிலிருந்து ஒன்றை எடுத்துவிட முடியாது. சொல் ஆடம்பரத்திற்காகவோ தேவையற்ற அணி என்பதற்காகவோ சிறந்த படைப்பில் ஏதும் இடம்பெறுதல் கூடாது.

3. ஓசைக்கோப்பு அல்லது சொல்லின் இசை ஒழுங்கைக் கவனிக்க வேணடுமே தவிர, கடிகாரம் போலக் கணக்காய்ப் போகின்ற முறையைப் பின்பற்றக் கூடாது.

இம் மூன்று கருத்துக்களைத் தவிர, வேறு மூன்று கருத்துகளையும் எஸ்ரா பெளண்ட் தனியே விளக்குகின்றார்.

1. தேவையில்லாத சொற்களை வழங்குதல் கூடாது. ஒரு பொருளை விளக்காததும் அவசியம் இல்லாததுமான அடைச்சொல்லை அகற்றவேண்டும்.

2. உருவத்தை மழுங்கச் செய்யும் சொற்களை நீக்க வேண்டும்.

3. அருவ உவமைகளைத் தவிர்த்து, நாம் தொட்டு நுகரக்கூடிய தூல உருவத்தைப் படைக்கவேண்டும்.

எஸ்ரா பெளண்ட் அவர்களைப் பின்பற்றி டி. எஸ். எலியட் என்பவர் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வழிகோலினார். எலியட்டின் எழுத்துகளும், எலியட் வழியாக பெளண்டின் கருத்துகளும் உலகெங்கும் பரவின. ஆங்கிலக் கல்விவழி இந்தியாவிலும் பரவியது. வங்க மொழியிலும் வேறு சில

த.-20