பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

தமிழ் இலக்கிய வரலாறு

புதுக் கவிதை- ஒரு பொதுக் கண்ணோட்டம்

பொதுவாகச் சங்ககாலம் முதல் பிற்காலம் வரை தோன்றிய மரபுக் கவிதைகள் அனைத்துமே வாழும் கவிதைகளாகத் திகழ்கின்றன என்று கூறமுடியாது. அவற்றுள் ஒருசில மட்டுமே நிலைபேறு உடையனவாகத் திகழ்கின்றன. இவற்றில் மணிகளும் உண்டு; பதர்களும் உண்டு. இவற்றைப் போலவே புதுக்கவிதைகளிலும் சில மணிகளும் உண்டு; பதர்களும் உண்டு. இவற்றில் கால வெள்ளத்தை நீந்தி வாழ்வன மட்டுமே பின்னால் வாழும் கவிதைகளாகத் துலங்கும்.

முடிவுரை

இவ்வாறாக வசன கவிதையின் ஆதிக்கத்தால் தோன்றிய புதுக்கவிதை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக வளர்ந்து இன்று கவிதை உலகில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

இசைத்தமிழ்

'இசை' என்ற சொல்லுக்கு 'இசைவிப்பது', 'வயப்படுத்துவது', 'ஆட்கொள்ளுவது' என்பது பொருளாகும். எல்லாம் கடந்து எங்குமாய் எல்லாம் நீக்கமற நிறைவுற்று விளங்கும் இறைவனையே நம்முன்னோர் இசை வடிவமாகக் கண்டனர். 'ஓசை ஒலியெலாம் ஆனாய நீயே' என்பது அப்பர் அருள்வாக்கு. மேலும், கோவை நூல்களில் சிறப்பித்துக் கூறப்படும் திருச்சிற்றம்பலக் கோவையார் எனப்படும் திருக் கோவையாரில் (20)

'சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்
சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண்

தீந்தமிழின்