பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

327


இராகங்கள் பழைய பண்களிலிருந்து அமைந்து வளர்ந்தவையே என்னும் உண்மை புறக்கணிக்கப்பட்டது. கர்நாடக இசை தென்னாட்டு இசைக்கலை என்பதும் ஏற்றுக் கொள்ளப்படாமற் போயின. கர்நாடக இசை என்பது, தெலுங்குப் பாட்டுகள் என்ற அளவிற்கு மயக்கமான ஒரு நிலை ஏற்பட்டது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தியாகையர், தெலுங்கில் கீர்த்தனங்கள் இயற்றினார்; சாகியத்தியங்களை உருவாக்கினார். இது போன்றே சீகாழி அருணாசலக் கவிராயர், தமிழில் 'இராம நாடகம்' என்னும் இயல் இசைத் தமிழ்மாலை இயற்றினார். கோபால கிருஷ்ண பாரதியார் 'நந்தனார் சரித்திரக் கீர்த் தனை'களை இயற்றி இசைத் தமிழிற்குத் தொண்டாற்றி னார். முத்துத் தாண்டவரும், நெஞ்சைத்தொடும் நல்ல கீர்த்தனைகள் இயற்றி உதவினார். மேலும், திருக்குற்றாலக் குறவஞ்சி இயற்றிய திரிகூட ராசப்பக் கவிராயர், கனம் கிருஷ்ணய்யர், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் . பெருங்கரைக் கவிக்குஞ்சர பாரதி, திருக்கடவூர் அபிராமி பட்டர், வையை மகாவைத்திய நாதையர், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், வடலூர் இராமலிங்க அடிகள் ஆகியோர் இசைத்தமிழ் உலகிற்குப் பெருந் தொண்டாற்றினர்.

இந் நூற்றாண்டில் தோன்றிய பாரதியார், “வித்துவான்கள் பழைய கீர்த்தனைகளைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம்பாட்டுகளை மட்டும் பாடுதல் நியாய மில்லை. அதனால் நமது ஜாதி, சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்தார். பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , பாரதி தாசன் ஆகிய மூவரும் இசைத் தமிழிற்குரிய பாடல்களை யும் எழுதி உதவினர். இன்று வாழும் கவிஞர்களில் யோகி சுத்தானந்த பாரதியார், பெரியசாமித் தூரன், என் எஸ். சிதம்பரம், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் முதலியோர்