பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

தமிழ் இலக்கிய வரலாறு


இசைப்பாடல்களை இசைத் தமிழுலகிற்கு அளித்துவருகின்றனர்.

தமிழிசைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, தமிழ் இசைஇயக்கம் கண்டு தொண்டாற்றிய பெருமை இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களையே சாரும். 1943-ல் தமிழ் இசை இயக்கம் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு உறுதுணையாக சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களும், கோவை திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும் தொண்டாற்றினார்கள். ரசிகமணி டி. கே. சி., கதைமணி கல்கி முதலானோரும் துணை நின்றனர். தமிழிசை இயக்கம் தொடக்கக்காலத்தில் தனக்கேற்பட்ட இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்து வெற்றிகண்டது. இப்பொழுது சென்னையில் இராஜா அண்ணமாலை மன்றம் அமைக்கப்பட்டு, டிசம்பர்த் திங்கள் இறுதியில் தமிழிசை விழாவும், பழம் பண்களை ஆராயும் பண் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற்று வருகின்றன. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ்க் கீர்த்தனங்களையும் தமிழிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளது. தமிழ் இசைச் சங்கத் தலைவராக, நீதிபதி எஸ். மகராசன் அவர்கள் இருந்துவந்தார்கள். செட்டி நாட்டு அரசர் இராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களுக்குப்பின், அவர்தம் இளவல் மு. அ. சிதம்பரம் அவர்கள் தந்தையார் விட்டுச் சென்ற பணியினை - தமிழிசை வளர்ச்சியினை-கண்ணும் கருத்துமாகக் காத்துவருகின்றனர். தமிழிசை நாளும் வளர்வதாக!

நாடகத் தமிழ்

'நாடகத் தமிழ்' என்ற ஒரு பிரிவு தமிழ் மொழியில் இருப்பது போல, உலகிலுள்ள மற்றெந்த மொழிகளிலும் நாடகப் பிரிவு என்பது இல்லை. ஆகவே நாடகத்தமிழ் என்பது தமிழ்மொழி ஒன்றிற்கே உரிய சிறந்த செல்வ