பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

தமிழ் இலக்கிய வரலாறு


தொலைக்காட்சி (television) யிலும் நாடகங்கள் இடம்பெறுகின்றன. நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதியும் நாடகமேடையில் புதுமுயற்சி மேற்கொண்டு வெற்றிகண்டுள்ளார்.

பரீக்ஷா என்னும் நாடகக் குழு, ஞாநி முதலியோரின் புதுமை நாடகங்களை மேடைபேற்றிப் புரட்சி செய்து வருகின்றது.

இக் கால நாடகங்கள் பெரும்பாலும் நகைச்சுவைத் துணுக்குகளின் தொகுதிபோலக் காணப்படுகின்றன. நகைச்சுவையோடு நல்ல நாடகங்களை, கிரேசி மோகன், விசு ஆகியோர் எழுதி வருகின்றனர். 1980 இல் அரங்கேறிய கோமல் சுவாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்' இன்றைய நாடகங்களில் சிறந்தது எனக் கூறலாம். இது புத்தகமாகவும் வெளிவந்து, 1981இல் இலக்கியச் சிந்தனையின் பரிசு பெற்றுள்ளதுடன், திரைப்படமாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிறுகதை வளர்ச்சி

இன்று தமிழில் மிகுதியாய் வளர்ந்துவரும் துறை சிறுகதைத் துறை எனலாம். மேலைநாட்டினர் தொடர்பால் தமிழ் உரைநடை வளர்ச்சி நல்ல திருப்பம் கண்டது. அதன் பயனாக உரைநடையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. மேலும், பத்திரிகைகளின் வளர்ச்சி சிறுகதை நாவல்களின் விரைந்த வளர்ச்சிக்கு வித்தூன்றிவிட்டது.

முதற்கண் சிறுகதையின் இலக்கணத்தைச் சுருங்கக் காண்போம்; சுவையான நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை அமைப்பு கவர்ச்சியான ஒரு காட்சி; நெருங்கிப் பின்னப்பட்ட சிறு நிகழ்ச்சிகள்; ஒருவரின் தனிப்பண்பு; ஒரு சிறு அனுபவம்; வாழ்க்கையின் ஒரு பெற்றி; அறவுணர்வால் விளைந்த ஒரு சிக்கல் - இவற்றுள் ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாய் அமையலாம். "சிறுகதை