பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

தமிழ் இலக்கிய வரலாறு


புதுமைப்பித்தன்

மறைந்து போன சிறுகதை எழுத்தாளர்களில் மூவர் புகழ்பெற்றவர். முதலாமவர், விருத்தாசலம் என்ற இயற்பெயரினைக் கொண்ட 'புதுமைப் பித்தன்' (1906-1948) ஆவர். இவரைச் 'சிறுகதை மன்னன்' என்றும், 'தமிழ்நாட்டின் மாப்பஸான்' என்றும் வழங்குவர். உலகத்தின் சிறந்த சிறுகதைகளை 'உலகத்துச் சிறுகதைகள்', 'தெய்வம் கொடுத்த வரம்' என்ற இவர்தம் மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் காணலாம். 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' என்ற இவர்தம் கதை, பாத்திரப்படைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது. 'அன்று இரவு ஒரு நல்ல கதை. இவருடைய சிறுகதைகள் பல, 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன.

கு. ப. ரா.

இரண்டாமவர், கு. ப. ரா. எனச் சுருக்கமாக வழங்கப்படும் கு. ப. ராஜகோபாலான் ஆவர். கற்பனை, மனத்தத்துவம் என்ற இரண்டும் இவர் சிறுகதைகளில் களிநடம் புரிவதைக் காணலாம். 'காணாமலே காதல்', 'புனர்ஜன்மம்' 'கனகாம்பரம்' முதலான இவர்தம் சிறுகதை தொகுதிகள், தேனினுமினிய செந்தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளாகும். இவற்றுள் 'காணாமலே காதல்' சரித்திரச் சிறுகதைத் தொகுதியாகும். 'விடியுமா' என்ற இவர் கதைக்கு ஈடாகத் தமிழில் குறிப்பிட எந்த ஓர் கதையும் இல்லை எனலாம்.

கல்கி

மூன்றாமவர், சிறுகதை, நாவல் முதலான புதிய இலக்கியத் துறையில் தமக்கெனத் தனியானதோர் இடத்தினைப் பிடித்துக் கொண்டுள்ள 'கல்கி' எனப்படும் ரா. கிருஷ்ணமூர்த்தி ஆவர். இவரைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் தந்தை எனலாம். எண்ணற்ற கதைகளை