பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

349


எழுதினார். 1902இல் இவருடைய, 'திக்கற்ற இரு குழந்தைகள்' எனும் நாவலும், 1903ல் 'மதிகெட்ட மனைவி' எனும் நாவலும் வெளிவந்தன. 1898-ல் பத்மாவதி சரித்திரத்தின் முதல் பாகமும், 1899-ல் இரண்டாம் பாகமும் வெளிவந்தன. இந் நாவலின் ஆசிரியர் அ. 'மாதவய்யா. இந்த நாவல்கள் வரலாற்றின் தொடக்கக் காலத்தனவாகும்.

மேலை நாட்டு நாவல்களில் வரும் பெயர்களையும் சம்பவங்களையும் தமிழ்ப் பாத்திரங்களின் உடையிலும் நடையிலும் உலவவிட்டுச் சில நாவல்கள் தமிழில் வந்தன. ரெயினால்ட்ஸ் (Reynolds) நாவல்கள் தமிழ் உருவம் கொண்டன. இத் துறையில் முதன்முதல் இறங்கியவர் ஆரணி குப்புசாமி முதலியார். இவர் நாவல்கள் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை.

அடுத்து வந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆங்கில நாவல்களைத் தழுவித் தமிழ் நாட்டு நிலைக்களன்களையும் சூழல்களையும் புகுத்தித் தமிழ் நாவல்கள் எழுதினார். இவர் எழுதிய நாவல்களில் மேனகா, திகம்பர சாமியார் அல்லது கும்பகோணம் வக்கீல் ஆகிய இரண்டும் சிறப்புடையன. இவை திரைப்படங்களாக்கப்பட்டுப் புகழ்பெற்றன. ஜே.ஆ. ரங்கராஜூ என்பவர் பல துப்பறியும் நாவல்களை எழுதினார். இராஜாம்பாள், சந்திரகாந்தா என்னும் நாவல்கள் இவர் எழுதிய நாவல்களில் புகழ் பெற்றன. மேலைநாட்டு நாவல்களில் வரும் ஷெர்லாக் ஹோம்ஸ் போன்று இவர் நாவல்களில் துப்பறியும் கோவிந்தன் வருவார். ரங்கூன் தி. ம. பொன்னுசாமிப் பிள்ளை மர்ம நாவல்கள் பலவற்றை எழுதினார், டி.டி. சாமி என்பவர் 'கருங்குயில் குன்றத்துக் கொலை' எனும் நாவலை எழுதி வெளியிட்டார்.

கே. எஸ். வேங்கடரமணி எனும் காந்தி பக்தர், காந்திய நோக்குடன், 'தேச பக்தன்', 'முருகன் ஓர் உழவன்' என்னும் நாவல்களை எழுதினார்; இவர் ஆங்கிலத்திலும் அருமையாக