பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

தமிழ் இலக்கிய வரலாறு


தயவிலேயே வளர்கிறது. அதனால் தற்காலப் புனைகதை இலக்கியத்தில் இதழ்களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது.

இதழ்களின் தயவை நாடாமல் புனைகதை வளரும் போதே அதன் தரம் உயரும் என்பது உறுதி.

இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சி

இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழ் பல்வேறு துறைகளிலும் செழித்து வளருவதனைக் காண நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. சென்னையில் திரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கல்வி அமைச்சராயிருந்தபொழுது 1946 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' நிறுவப்பட்டது. இக் கழகத்தின் நோக்கம் தமிழின் பண்டைச் சிறப்புகளைக் காப்பதும், இக்கால நடைமுறைக்கு ஏற்ற பண்புகளைப் பெற்று விளங்கச் செய்வதுமாகும். இக் கழகத்தின் முக்கியமான பணிகள் மூன்று. ஒன்று: தமிழிற் பல்வேறு துறைகளிலும் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்தல்; இரண்டு: ஆண்டுதோறும் வெவ்வேறிடங்களில் தமிழ் விழா நடத்துதல்; மூன்று, கலைக்களஞ்சியம் தயாரித்தல்.

இம் மூன்று பணிகளும் சீரிய முறையிலே செயலாற்றப்பட்டு வருகின்றன. 750 பக்கங்கள் கொண்ட பத்துத் தொகுதிகள் கலைக்களஞ்சியமாக வெளிடப் பெற்றுள்ளன. இஃது இந்திய மொழிகளிலேயே முதன் முயற்சியாகத் தமிழில் நடந்து வெற்றியும் கண்டுவிட்டது. இது போது கிறுவர் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகள் வெளிவந்து நிறைவுற்றுள்ளது.