பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

83


இல்லறமாவது, ஒருவன் மனைத்தக்க மாண்புடையாளை வாழ்க்கைத் துணையாகக்கொண்டு, நல்லறமாம் இல்லறத்திற்கியைந்த செயல்களை நாள்தோறும் செய்து மக்கட்பேற்றுடன் மகிழ்ந்து வாழ்தலாகும்.

துறவறமாவது, இல்வுலகில் நில்லாமையே நிலையானது என்று தெளிந்து, பிறப்பால் வருவது துன்பமே என்றும், பிறவிப் பெரும்பிணியை அகற்றுவதே பேரின்பம் என்றும் கொண்டு பற்றற்று மறுமை நோக்கி - வீட்டின்பம் நோக்கி - தவஞ்செய்யும் அரிய நெறியாகும்.

'அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஓய்ப் பெறுவது எவன்?'

என்று இல்லறத்தைப் பாராட்டிய திருவள்ளுவர்,

'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்!'

என்று துறவறத்தின் பெற்றியினையும் புலப்படுத்துகிறார்.

அரசன் என்ன குணங்களோடு விளங்கி எவ்வண்ணம் நாட்டை ஆளவேண்டும் என்பதை அரசியல் கூறுகின்றது. அரசனுக்கு அங்கமாய் அமையும் அமைச்சர், தூதுவர் முதலியவர் இலக்கணங்களை அங்கவியல் அறிவிக்கின்றது. ஒழிந்த, வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புடைமை, நாணுடைமை முதலியவற்றினை ஒழிபியல் உணர்த்துகின்றது.

திருவள்ளுவரின் காமத்துப்பாலில் தான் உண்மையான இலக்கியத்தின் சிறப்பையெல்லாம் நாம் நுகர்கிறோம். அவருடைய கற்பனை சிறகடித்துப் பறப்பதை இங்கேதான் நாம் காண இயல்கிறது. முதன்முதல் தமிழகத்தில் கள்ளுண்ணலைக் கண்டித்த சான்றோர் திருவள்ளுவர் ஆவது