பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



90 தமிழ் இலக்கிய வரலாறு என்னும் பெயர் எய்தியிருந்தமை (50), தமிழ் வேந்தர்கள் தம் பிறந்தநாள் விழாக்களில் அந்தணர்கட்குப் பசுவும் பொன்னும், புலவர் பெருமக்கட்குக் களிறும் வழங்கியமை (40), பாண்டி நாட்டுக் கொற்கைத் துறையில் சிறந்த முத்துக்கள் கிடைத்து வந்தமை (101), முற்காலத்தில் தமிழ்நாட்டுப் பெண்கள் சங்கு களால் அமைக்கப்பட்ட வளைகளை அணிந்து வந்தமை (41), தமிழகத்தில் இல்லங்கள் தோறும் குடுமிக் கதவுகள் இருந்தமை (43), சோழனுடைய குதிரை பாடலம் என்னும் பெயர் பெற்றிருந் தமை (48) என்பனவாம். சோழனுடைய குதிரை கோரம் என்னும் பெயருடையது என்பது, ' ஆரந் தழுவு தடந்தோ ள களங்கன் கோரந் தொழுத கொடிக்கு ' (தண்டியலங். சூ. 38) எனவும்,

  • கோழி யனுபமன் கோரம் புலிவாழி வாழிய மண்டலத்து வான் '

(வீரசோ. அலங். சூ. 13, 32 மேற்கோள்) எனவும் போ தரும் பழைய பாடல்களால் நன்கறியக் கிடக் கின்றது. அன்றியும், சோழர்களின் அவைக்களப் புலவரா யிருந்த ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா ஆகிய மூன்றிலும் சோழர் களின் குதிரையின் பெயர் கோரம் என்றே குறித்துள்ளனர். இந் நிலையில் சோழனுடைய குதிரையைப் பாடலம் என்று முத் தொள்ளாயிரமுடையார் கூறியிருப்பது ஆராய்தற்குரிய தாகும். இவர் கூற்றிற்கு முரணாகப் பிங்கலந்தை என்ற நிகண்டின் ஆசிரி யர் பாடலம் என்பது சேரனுடைய குதிரையின் பெயர் என்று கூறியுள்ளனர். சங்கத்துச் சான்றோர் பாடல்களில் கன வட்டம்