பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முத்தொள்ளாயிரம் 91 பாடலம் என்னும் பெயர்களே காணப்படவில்லை. ஆனால், மருதக்கலியிலுள்ள 31-ஆம் பாடலில் ' கோரமே வாழி குதிரை' என்று மதுரை மருதனிள நர்கனார் கூறியிருப்பது சிந்திக்கத்தக்க தொன்றாம். தமிழ் வேந்தர்கட்குத் தசாங்கம் கூறும் வழக்கம் ஏற்பட்ட காலத்தில் தான் அன்னோர் குதிரைகளுக்கும் தனித் தனிப் பெயர் இடப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, கடைச்சங்க காலத்திற்குப் பிறகு முத்தொள்ளாயிர ஆசிரியர்காலத்தேதான் தமிழ் வேந்தர்களின் குதிரைகட்குத் தனிப்பெயர்கள் வழங்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். அவர்க் குப் பிற்பட்ட காலத்துப் புலவர்களால் அப்பெயர்கள் எக் காரணம்பற்றியோ மாற்றிக் கூறப்பட்டுள்ளன. ஆயினும் அவ் வக் காலங்களில் வழங்கியவாறே அப்பெயர்களைப் புலவர் பெரு மக்கள் தம் நூல்களில் கூறியுள்ளனராதல் வேண்டும். முத்தொள்ளாயிரத்தின் அருமை பெருமைகளையும் ஒப்புயர் வற்ற தனிச் சிறப்பினையும், கச்சி யொருகால் மிதியா வொருகாலால் தத்து நீர்த் தண்ணுஞ்சை தான்மிதியா--பிற்றையும் ஈழ மொருகால் மிதியா வருமேகம் கோழியர்கோன் கிள்ளி களிறு' (முத்தொள். பா. 21) பார்படுப் செம்பொன் பதிபடுவ முத்தமிழ் நூல் நீர்படும் வெண்சங்கு நித்திலமுஞ்-சாரன் மலைபடுப யானை வயமாறன் கூர்வேற் றலைப்படுப தார்வேந்தர் மார்பு' (ஷ. பா. 36) ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப் பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு.' (ஷை. பா. 88)