உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4. திரிகடுகம் இது கடவுள் வாழ்த்துட்பட நூற்றொரு வெண்பாக்களை யுடைய ஒரு நீதிநூல். ஒவ்வொரு பாடலும் மக்கட்கு நலம் பயக்கும் மும்மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுகின்றது. இந் நூலில் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்றாம் அடியின் ஈற்றுச் சீர் ' இம்மூன்றும் ' என்றாதல் - இம்மூவர் ' என் றாதல் தொகை கூறுதல் குறிப்பிடத்தக்கதாம். - இனி, திரிகடுகம் என்ற தொடர், சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றையும் குறிக்கும் என்பது, ' திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி ' என்ற திவாகரச் சூத்திரத்தினால்1 நன்கறி யப்படும். எனவே, சுக்கு மிளகு திப்பிலியாலாகிய திரிகடுகம் என்னும் மருந்து, உடல் நோய் நீக்கி மக்கட்கு நலம் புரிவது போல், அன்னோர்க்குறுதிப் பொருள்களை அறிவுறுத்தி அறியா மையாகிய மனவீருளைப் போக்கி, இம்மை மறுமை இன்பங்களை அளிக்கவல்லது இத்திரிகடுகம் என்னும் நூல் என்பது ஆசிரிய ரது கருத்தாதல் வேண்டும். இதன் ஆசிரியர் நல்லாதனார் என்ப வர் : ஆதன் என்ற இயற்பெயர் கடைச்சங்க காலத்திற்கு முன்னரே நம் தமிழ் நாட்டில் வழங்கி வந்தது என்பதைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலில் ' ஆதனும் பூதனும்' என்று தொடங்கும் ஐம்பத்து மூன்றாம் சூத்திரத்தி னால்2 அறியலாம். கடைச்சங்க நாளில் அப்பெயர் சேரநாட்டில் தான் மிகுதியாக வழங்கியுள்ளது என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் நன்கு புலப்படுகின்றது. ஆகவே, நல்லாதனார் என்பார், சேரநாட்டிற்கு அண்மையிலுள்ள தென்பாண்டி நாட் டில் திருநெல்வேலியைச் சார்ந்த திருத்து என்னும் ஊரினர் 1. திவாகாநிகண்டு, XII, சூத்திரம் 31. 2. 4 ஆதனும் பூதனுக் கூறிய வியல்பொடு பெயரொற்றகரத் துவாக் கெடுமே' (தொல், எழுத்து, புள்ளிமயங்கியல், 53)