பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு என்று பழம்பாடல் ஒன்று கூறுவது பொருத்தமுடையதேயாம். இவர் வைணவ சமயத்தினர் என்பது இவர் கூறியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலால் உணரக்கிடக்கின்றது. இவர் தம் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று பொருள்கள் ஒரு சிறந்த பொது உண்மைக்கு உட்படுமாறு அமைத்துக் கூறியுள்ளமைக் கேற்ப, தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமாலின் திருவடி கள், ஞாலம் அளந்தமை, குருந் தஞ்சாய்த்தமை, சகடம் உதைத் தமை ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தியதைப் பாராட்டி யிருத்தல் 2 அறிந்து மகிழ்தற்குரியதாகும். இவ்வாசிரியர் தம் நூலுக்குத் திரிகடுகம் என்னும் வட மொழித்தொடரைப் பெயராக அமைத்திருத்தலை நோக்கு மிடத்து, இவர் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு வடமொழிக்கு அரசாங்க ஆதரவும் ஏற்றமும் மிகுந்திருந்த காலப்பகுதியில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, இவர், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருக் தவர் எனலாம். இவர் திருக்குறளைத் தெளிவாகப் பயின்று அந் நூலிலுள்ள அரிய கருத்துக்களையும் தொடர்களையும் தம் நூலில் பல இடங்களில் அமைத்துள்ளமை அறியத்தக்கது. அன்றியும், இனியவை நாற்பது என்ற நூலிலுள்ள பல கருத்துக்களும் தொடர்களும் இவர் உள்ளத்தைப் பிணித்து, இவர் நூலாகிய திரிகடுகத்தில் இடம்பெற்று விட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1. செல்வத் திருத்துளார் செம்மல் செருவடுதோள் நல்லாத னென்னும் பெயரானே--- பல்லார் பரிவொடு நோயவியப் பன்னியா சாய்ந்து திரிகடுகஞ் செய்த மகன்.' இப்பாடல், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த திருவாளர் பாவ்சாகிப் S. வையாபுரிப்பிள்ளை அவர்கள் தம் திரிகடுகப் பதிப்பில் புதிதாகக் கண்டு வெளியிட்டுள்ள தொன்றாம். 2. ' கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகடம் உதைத்த தூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி ' (திரிகடுகம் - கடவுள் வாழ்த்து .)