பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரிகடுகம் தவ முதலியன க்கணக்கு கள அம்மை எனவே, இவர் தம் காலத்திற்கு முற்பட்ட நீதிநூல்கள் பல வற்றையும் கற்றுத்தெளிந்தவர் என்று ஐயமின்றிக் கூறலாம். இவர் தம் நூலாராய்ச்சியாலும் வாழ்க்கையனுபவத்தாலும் உணர்ந்த பல பல உண்மைகளுள் மும் மூன்று, ஒவ்வொரு தலைப்பிற்குள் அடங்குமாறு அமைத்து வெண்பாயாப்பில் இந் நூலை இயற்றியிருப்பது பெரிதும் பாராட்டற்பாலது. இவரது வாழ்க்கை வரலாறு முதலியன புலப்படவில்லை. இவரது நூலா கிய திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என் னும் வனப்பிற்கு இலக்கியமாய் அமைந்ததென்பதும் ஈண்டு உணரற்பாலனவாம். இந்நூல் பல உண்மைகளையும் நீதிகளையும் மக்கட்கு அறிவுறுத்தும் சிறப்புடையதாதலின் இஃது எல்லோ ரும் படித்தற்குரிய ஓர் அரிய நூலாகும். இந்நூலிற் கூறப்பட் டுள்ளவற்றுள், 1. - தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் (பா. 12.) 2. * வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் ' (பா. 21.) 3. ' தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை' (பா.2.) 4. ' ஈதற்குச் செய்க பொருளை ' (பா. 90.) 5. - நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்' (பா. 72) 6. ' கண்ணுக்கணிகலம் கண்ணோட்டம்' (பா. 52.) 7. ' நெஞ்சம் அடங்குதல் வீடாகும்' (பா. 43.) என்னுந் தொடர்கள் யாவரும் என்றும் மறத்தலாகா அறி வுரைகளாகும்.