உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8. ஏலாதி பங்குமானது கான்கு இரண்டு பங்குகள்ளன. என இது கடவுள் வாழ்த்தோடு எண்பத்தொரு பாடல்களை யுடைய ஒரு நீதி நூல். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் அவ்வாறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஏலம் ஒரு பங்கும், இலவங்கப்பட்டை இரண்டு பங்கும், நாககேசரம் மூன்று பங் கும், மிளகு நான்கு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும், சுக்கு அறு பங்குமாகச் சேர்த்துச் செய்யப் பெற்ற ஏலாதி சூர்ணம் மக்க ளுடைய நோயை நீக்கி உடலுக்கு வலிமையளித்தல்போல, பாடல் தோறும் அவ்வாறு பொருள்கள் அமைந்த ஏலாதி என் னும் இந்நூல், 'அன்னோரின் அறியாமையைப் போக்கி உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்யுணர்வை அளிக்கவல்லது என் பது இந்நூற் பெயரால் அறியக்கிடப்பதோர் உண்மையாகும். இக்கருத்தினைத் தம் உள்ளத்திற்கொண்டே இதன் ஆசிரியர் இதற்கு ஏலாதி என்னும் பெயரை இட்டனர் எனலாம். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ; ஆசிரியர் தொல் காப்பியனார் கூறியுள்ள அம்மையென்ற வனப்பிற்கு இலக்கிய மாய் வெண்பா யாப்பில் அமைந்தது. இதன் ஆசிரியர் கணி மேதாவியார் எனப்படுவர். இந்நூலின் சிறப்புப்பாயிரப் பாட லால் இவர் கணிமேதையார் எனவும் வழங்கப்பெற்றனர் என்று தெரிகிறது.1 தமிழ்ப்புலவராகிய இவர் சோதிடத்திலும் வல்லு நராயிருந்தமை பற்றிக் கணிமேதையார் என்று வழங்கப்பெற் - றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அங்ஙனமாயின் இவரது இயற்பெயர் வேறொன்றாதல் வேண்டும். அஃது இந்நாளில் புலப்படவில்லை. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே யாவர். அகப்பொருளுக்கு இலக்கியமாயுள்ள அந்நூல் இவரது பொருளிலக்கணப் பயிற்சியையும், ஆராய்ச்சியையும் நன்கு விளக்குவதாகும். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் என்று பாயிரத்தில் கூறப்பட்டிருத்தலால் இவரும் சிவபஞ்ச மூலத்தின் ஆசிரியராகிய காரியாசானும் ஒருசாலை 1. ' இல்லற நூ லேற்ற துறவறள லேயுங்கால் சொல்லற நூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் - - கணிமேதை செய்தான் கலந்து ' (ஏலாதி, பாயிரப்பாடல்)