பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்'

(13-18)

10 பட்டினப் பாலை

இது 301 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் மிகுதியாக விரவிவந்த ஆசிரியப்பாவால் அமைந்தமையின் இது வஞ்சிநெடும்பாட்டு எனவும் வழங்குகிறது. இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாவார். கரிகாற் பெருவளத்தான் இதன் தலைவனாவன். தலைவியைப் பிரிய நினைத்த தலைவன், தன் நெஞ்சினை நோக்கிப் 'பட்டினமே பெறுவதாயினும் பிரிந்து வாரேன்' என்று கூறிச் செல வழங்குவதாகப் பாடப்பெற்ற அகத்திணைப் பாடல் பட்டினபாலை. பட்டினம் என்பது காவிரிப்பூம் பட்டினத்தையும், பாலை என்பது திணையொழுக்கத்தையும் குறிக்கும்.

தலைவன் செல்லும் கானமோ வெம்மையானது; தலைவியின் தோள்களோ தண்மையானவை; ஆகையால் புகார்ப் பட்டினமே கிடைப்பினும் அவளைத் தான் பிரிவதற்கில்லை" என்று தலைவன் தன் நெஞ்சினை நோக்கிக் கூறுவதனைப் பின்வரும் தொடர்கள் குறிப்பிடு கின்றன.

"முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே!”

அவன் கடக்க வேண்டிய சுரத்தைத் 'திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம்' என்னும் தொடரும், அவன் தழுவும் தலைவியின் தோள்கள்