பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வகைப்படுத்திக் காண்பர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பவை ஐம்பெருங்காப்பியங்களாகும். இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றின.

3. சீவக சிந்தாமணி

திருத்தக்க தேவர் இதன் ஆசிரியர் இவர் சமண துறவி; நிலையாமையையும் அறத்தையும் வற்புறுத்தும் நோக்கத்தோடு இந்நூல் அமைந்துள்ளது.

இது நாமகள் இலம்பகல் முதல் முத்தியிலம்பகம் முடியப் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டது; 3145 செய்யுட்கள் இதன்கண் உள்ளன . இதற்கு நச்சினார்க்கினியர் சிறந்ததோர் உரை எழுதியுள்ளார். இதன் காலம் கி. பி பத்தாம் நூற்றாண்டு

இக்காப்பியத் தலைவன் சீவகன், ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் விசயமா தேவியை மணந்தான்; நாடாளும் பொறுப்பினை அமைச்சனாக இருந்த கட்டியங்காரனிடம் ஒப்படைத்துவிட்டுப் புதுமண வாழ்வின் இன்பத்தில் மூழ்கினான். கட்டியங்காரன் ஆட்சியைத் தானே கைப்பற்றிக் கொள்ள விரும்பினான்: சூழ்ச்சியால் மன்னனை வீழ்த்தக் காலம் கருதி இருந்தான். வேந்தனும் விசயமா தேவியை மயிற் பொறியில் அமர்த்தித் தப்பு வித்தான்; பின்பு கட்டியங்காரனை எதிர்த்து மடிந்தான், அவன் மகன் சீவகன் மணம் பல பூண்டான்; கட்டியங்காரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இறுதியில் நிலையாமையை உணர்ந்து துறவினை மேற்கொண்டான். இது சீவக சிந்தாமணியின் சுருக்கமாகும்.

4. வளையாபதி

இதுவும் ஒரு சமண காப்பியம் ஆகும்; இஃது இன்று முழுமையாக்க் கிடைக்கவில்லை; 72 பாடல்களே கிடைத்