பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

தொல்காப்பியனார் விரித்துக் கூறியவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் தந்துள்ளார். இதன் பாயிரம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் அரும்பொருள் ஐந்தனையும் இது ஓதுவதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இன்று எழுத்தும் சொல்லுமே கிடைத்துள்ளன.

நம்பியகப் பொருள்

இதன் ஆசிரியர் நாற்கவிராச நம்பியார்; காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இஃது அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிறது. இதனை இலக்கணமாகக் கொண்டு தஞ்சைவாணன் கோவை எனும் நூலைப் பொய்யாமொழிப் புலவர் இயற்றியுள்ளார். அதனால், அதன் பாடல்கள் இந்நூற்கண் உதாரணச் செய்யுள்களாகந் தரப்பட்டுள்ளன.

யாப்பருங்கலம்

இதன் ஆசிரியர் அமிதசாகரர், காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று பகுதிகளால் இது யாப்பிலக்கணத்தை ஓதுகிறது.

யாப்பருங்கலக்காரிகை

இதன் ஆசிரியரும் அமிதசாகரரே, இது யாப்பருங்கலத்தின் சுருக்கமாகும், கட்டளைக் கலித்துறை யாப்பால் இஃது இயற்றப்பட்டுள்ளது. இதுவும் உறுப்பு, செய்யுள், ஒழிபு எனும் மூன்றியல்களால் யாப்பிலக்கணத்தை ஓதுகிறது.

வச்சணந்திமாலை

இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்; தம் ஆசிரியர் பெயராகிய வச்சணந்தி என்பதையே தம் நூலுக்குப் பெயராக வைத்துள்ளார். இது சிற்றிலக்கியங்களின் அமைப்புப் பற்றியும். செய்யுள் எழுதும் முறைகளைப் பற்றியும் கூறுகிறது. இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.