பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

திருவாடுதுறையைச் சார்ந்த ஈசான தேசிகர் இலக்கணக் கொத்து என்னும் நூலை இயற்றினார். அவர் மாணவர் சங்கர நமசிவாயர் நன்னூலுக்கு விருத்தியுரை ஒன்று எழுதினார். இவர் மாணவர் சிவஞான முனிவர் இவரது நன்னூலுரையை மேலும் விரிவுபடுத்தினார். இவர் காலம் 18ஆம் தூற்றாண்டு.

தாயுமானவர்

இவர் திருமறைக் காட்டில் சைவ வேளாளர் குலத்தில் தோன்றினார். தமிழ் வடமொழி. இரண்டையும் நன்கு. கற்றார். சமரச சன்மார்க்க நெறியைப் புகுத்தியவர் இவரே. இவர் பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் எனும் பெயரில் புத்தகமாகி வெளிவந்துள்ளன. அவை சைவசமய உண்மைகளையும், சித்தாந்தக் கொள்கைகளையும் விளக்கு கின்றன

“எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லால் வேறு ஒன்று அறியேன் பராபரமே”

எனும் தொடர். இவரது பரந்த மனப்பான்மையை விளக்குகின்றது. காலம் 18ஆம் நூற்றாண்டு.

முகம்மதியப் புலவர்கள்

இசுலாமியப் புலவர் பலர் அரபுமொழிப் பயிற்சியோடு: தமிழ்மொழிப் புலமையும் பெற்றுப் பல அரிய நூல்களைப் படைத்துள்ளனர். காப்பியம், புராணம், சிற்றிலக்கியம், நாடகம் முதலியவற்றை இயற்றியதோடு பல புதிய இலக்கிய வகைகளையும் அவர்கள் தமிழில் புகுத்தியுள்ளனர். கும்மி, ஒப்பாரி, தாலாட்டு, ஏசல், சிந்து முதலாய பாமரர் இலக்கிய வகைகளிலும் அவர்கள் நூல்கள் பல யாத்துள்ளனர்.

உமறுப்புலவர், பீர்முகமது, குணங்குடி மஸ்தான் வண்ணக் களஞ்சியப் புலவர், செய்குத்தம்பிப் பாவலர்,