பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


வீரமாமுனிவர்

தமிழிலும் இலத்தீனிலுந் தந்தபடி ஆராய்ந்து சுத்தப் பிரதியாக்கப்பட்ட

பரமார்த்த குருவின் கதை

Pudicherii E typographio Missionariorum Apostolicorum Congregationis Missionum ad Exteros. 1845

Cum Superiorum permissu. #:

இது, முதல் பதிப்பின் முகப்புப் பக்கமாகும். Fabula என்றால் கதை. இந்நூலின் இறுதியில், “பரமார்த்த குருவின் கதை முற்றிற்று. என்ற தொடர் உள்ளது. 1845-ஆம் ஆண்டில் அச்சான பதிப்பில் 41 பக்கங்கள் உள்ளன. இதே நூல், 1952-ஆம் ஆண்டுப் பதிப்பில் 67 பக்கங்களாக நிரவல் பெற்றுள்ளன.

நூலில் கதைகள் தொடங்கப்படுவதற்குமுன் ஆசிரியர் முன்னுரை இலத்தின் மொழியில் எழுதப் பட்டுள்ளது. கதைகள் இலத்தீன், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இருந்தாலும், ஆசிரியர் இலத் தின் மொழியில் மட்டும் முன்னுரை எழுதியுள்ளார். அவர் தமது முன்னுரையில் பின்வரும் கருத்துக் களேத் தெரிவித்துள்ளார்.