பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


அகராதியின் முதல் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் (Title page) பின்வரும் விவரம் உள்ளது:

DICTIONNAIRE

TAMOUL - FRANCAIS

Par Deux Missionnaires Apostoliques

De La Congregation

Des Missions – Etrangeres.

அங்கிய தேசத்துப் போதகர் சபையிலுள்ள அப்போஸ்தொலிக்குக் குருக்களி லிருவர் செய்தருளிய

தமிழ் பிராஞ் சகராதி

Pondichery

1855

மேலுள்ள பகுதியில், குருமார்களில் இருவர் இயற்றியது என்னும் விவரம் பிரெஞ்சு மொழியிலும் தமிழ் மொழியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனல் அவ்விருவரின் பெயர்கள் வெளியிடப்படவில்ல. பின்னர், அதே அச்சகத்தில் 1895-ஆம் ஆண்டு அச்சான அதே அகராதியின் இரண்டாம் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் பின்வருமாறு விவரம் உள்ளது: