பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


  • “......... Nanmoins c’est avec plaisir que nous aimons payer in tribut de reconnaissance aux sources principales, dans les quelles nous avons puis, telles que le Dictionnaire de Rottler, celui de Jaffna, le Sadouragardi du P. Beschi, le Dictionnaire manuscrit du mme Pre, celui du P. de Bourges, et le Dictionnaire Tamoul - Latin lithographi du P. Gury.” -sigra gl:

“எங்கள் அகராதிக்கு அடிப்படை யூற்றாக உள்ள ரொட்லர் அகராதி, யாழ்ப்பாண அகராதி, பெஸ்கியின் அகராதிகள், பூர்ஷ் அகராதி, குரியவர் களின் தமிழ் - இலத்தீன் கல்லச்சு அகராதி ஆகிய வற்றிற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்’. என்று முசே, துய்புய் இருவரும் கூறியுள்ளனர். 1855-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட இ ங் த த் துறவியர் இருவரின் தமிழ் - பிரெஞ்சு அகராதியின் முன் னுரையில், குரி பாதிரியாரின் கல்லச்சு செய்யப் பெற்ற தமிழ் - இலத்தீன் அகராதி சுட்டப்பட்டுள்ள தெனில், இந்தத் தமிழ் - இலத்தீன் அ. க ரா தி 1855-ஆம் ஆண்டுக்கு மு ன் பே குரியவர்களால் தொகுக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது வெளிப் படை. எனவே, இவ்வகராதி, 1840-ஆம் ஆண்டுக் கும் 1855-ஆம் ஆண்டுக்கும் இடையே குரி பாதிரி யாரால் தொகுக்கப்பட்டது எ ன க் .ெ கா ள் ள வேண்டும். தமிழ் - இலத்தீன் அகராதித் தொகுப் பில் வீரமாமுனிவருக்கு அ டு த் த இரண்டாவது இடம் குரி பாதிரியாருக்கு உரியது என்பது இப்போது தெளிவாகிறது. குரியின் அகராதியும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

  • Dictionnaire Tamoul - Francais, Preface, De la lre Edition - 1st page - 4th paragraph.