பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166


வீரமாமுனிவரின்

திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பு

நூற்றுக்கு மேற்பட்ட உலகப் பெருமொழி களில் பெயர்க்கப்பட்டுள்ள உலகப் பெருநூலாகிய திருக்குறள், ஐரோப்பிய மொழிகளின் முதன்மை மொழியாகிய இலத்தீனில் வீரமாமுனிவரால் முதன் மையாகப் பெயர்க்கப்பெற்றது. இந்த இலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து, பி ன் ன ர் வேறு பல ஐரோப்பிய மொ ழி க ளி ல் குறள் பெயர்க்கப் பெற்றது. திருக்குறளின் வாயிலாகத் த மி பூமி ன் பெருமையினையும் தமிழரின் மாண்பிக்னயும் உலகம் அறிந்து போற்றுவதற்கு வீரமாமுனிவரின் இலத் தீன் மொழிபெயர்ப்பு ஒரு வாயிலாக இருந்தது.

இந்த மொழிபெயர்ப்பு நூலில் ஒரு குறை உண்டு. அதாவது, வீரமாமுனிவர் துறவியாயிருந்த தல்ை, திருக்குறள் காமத்துப்பாலே மொழிபெயர்க் காது விட்டுவிட்டார் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டினை மட்டுமே இலத்தீனில் மொழி பெயர்த்துள்ளார். காமத்துப் பாலேயும் மொ ழி பெயர்த்து ஐரோப்பியர்க்கு அன்றே தந்திருந்தால், காதல் வாழ்க்கையின் உயர்ந்த கோட்பாட்டையும் திருக்குறளின் சிறந்த இலக்கியச் சுவை மதிப்பையும் அவர்கள் எப்போதே பெற்று மகிழ்ந்து பயனுற் றிருப்பர். காமத்துப்பாலே வீரமாமுனிவர் விட்டுவிட் டதால், அதனை ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ள மேலும் சில ஆண்டுகள் ஆயின - அவ்வளவுதான் !