பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


லுைம் அரசியல்-சட்ட ஆட்சி மொழியாக இருந்தத லுைம் சமயச்சடங்கு மொழியாக இருப்பதலுைம், பண்டு ஐரோப்பாவில் பரவலாகப் பல நாடுகளிலும் இந்த மொழி கற்கப்பட்டு வந்தது; இன்றும் ஓரளவு பலராலும் கற்கப்படுகிறது. எனவே, த மி ழ் மொழியைப்பற்றி இலத்தீன் மொழியில் எழுதினல், பல்வேறு ஐரோப்பிய நாட்டினரும் தமிழைப்பற்றி அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும், இலத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ள தமிழிலக் கணத்தை, ஐரோப்பியர் பலரும் தத்தம் மொழி களில் பெயர்த்துக்கொள்ளவும் முடியும். இது நடைபெற்றும் இருக்கிறது பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதிய தமிழிலக் கணம் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பெற்றுப் படிக்கப்பட்டது. தமிழகத்தை யாண்ட ஆங்கிலமும் பிரெஞ்சுங்கூட, இலத்தீனிலிருந்து தமிழிலக்கணத்தைத் தாம் பெற் றன என்றால், இலத்தீன் மொழியின் இன்றியமை யாச் சிறப்பும், அம்மொழியில் த மி ழி ல க் க ண ம் எழுதப்பெற்ற அருமை பெருமையும் இனிது புலனுகுமே !

தமிழ் மொழி குறித்தும் இலக்கண விளக்கங் குறித்தும் இலத்தீனில் பல நூல்கள் எழுதப்பட் டிருப்பது போலவே, இலத்தீன் மொழி-இலக்கணம் பற்றித் தமிழிலும் சில நூல்கள் எழுதப்பட்டுத் தமிழ்-இலத்தின், இலத்தின் தமிழ்ப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.