பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


வழக்கு ஆகிய இரண்டிலும் அழியாது நின்று கிலேத்து டிேத்து மேன்மேலும் வளர்ந்துகொண் டிருக்கும் மொழி தமிழ் மொழி. இனிமை என்னும் பொருளுடைய தமிழ் என்னும் பெயரைப் பெற்று, பெயருக்கேற்றாற்போல் இனிமையுடையதாய் விளங் கும் மொழி தமிழ் மொழி.

திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மை மொழி - மூத்த மொழி தமிழ் மொழி; மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, குடகு, தூதம், கோடம் கொலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கோந்த், கோண்டா, கூ, கூய், குரூக், மால்டோ, பிரா கு ய், கவர் மொழி, உராவன் மொழி முதலிய திராவிட மொழிகளின் தலைமை மொழி - தாய்மை மொழி தமிழ் மொழி. தன்னிடமிருந்து பல மொ ழி க ள் கிளேத்துப் பிறந்திருப்பினும், தான் ஆண்டால் மூத்திருப்பினும், என்றும் அழியாத - மா ரு த இளமைப்பொலிவுடன் நின்றுநிலவும் கன்னி மொழி தமிழ் மொழி

எழுத்து வளமும் இலக்கிய இலக்கண வளமும் நிறைந்த மொழி தமிழ் மொழி; இந்திய மொழி கட்கெல்லாம் எழுத்தமைப்பைக் கற்றுக்கொடுத்த மொழி தமிழ் மொழி. இலத்தீன் முதலிய ஐரோப் பிய மொழிகளில் உயிர்மெய் எழுத்து இல்லை; சம்சுகிருத மொழியிலும் அதன் வழிமொழிகளான வட இந்திய மொழிகளிலும் உயிர்மெய் எழுத்து உண்டு: சம்சுகிருதமோ, ஐரோப்பிய மொழிகளைப்