பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


பரமார்த்த குரு கதை என்னும் கதை நூலே இலத்தீ னிலும் பெயர்த்துள்ளார்.இவ்வாறு மொழிபெயர்ப்பு வாயிலாகத் தமிழ் மொழியை உலக அரங்கில் அறி முகப்படுத்தியதல்லாமல், கொடுந்தமிழ் இலக்கண விளக்கம்’ , ‘செந்தமிழ் இலக்கணச் சுருக்கம்’ , ‘செங் தமிழ் இலக்கணத் திறவுகோல் ஆகிய தமிழிலக் கணம் பற்றிய நூற்களை இலத்தீன் மொழியில் எழுதி, ஐரோப்பியர் தமிழிலக்கணம் கற்க வழிசெய்து தேன் தமிழொலி உலகமெல்லாம் பரவச் செய்தார். மற்றும், தமிழ்-இலத்தீன் அகராதி, இலத்தீன்-தமிழ் அகராதி, போர்த்துகீசியம்-இலத்தீன்-தமிழ் அகராதி, தமிழ்பிரெஞ்சு அகராதி, தமிழ் ஆங்கில அகராதி முதலிய அகராதிகள் பல தொகுத்து மிகுந்த அளவில் தமிழ் பரவச்செய்து உ ல கி ன் த மி ழ் த் தூதுவராய் விளங்கினர்.

தமிழரோடு தமிழராயிக் கலந்து உறைந்து, தமிழ் நூற்களை ஆராய்வதிலும் - தமிழ் நூற்கள் எழுதுவதிலுமே தம் காலத்தின் பெரும் பகுதியைச் செலவழித்தார் வீரமாமுனிவர். த மி மு க த் தி ல் காமநாயக்கன்பட்டி, கயத்தாறு, மதுரை, அரியலூர், தஞ்சாவூர், கோனன்குப்பம், ஏ. லா க் கு றி ச் சி, துரத்துக்குடி முதலிய ஊர்களில் தம் வாணுளின் பெரும் பகுதியைக் கழித்த முனிவர் பெருமான், இ று தி யி ல் மலேயாளத்தி லுள்ள அம்பலக்காடு என்னும் ஊரில் சின்னுள் தங்கியிருந்து 1747-ஆம் ஆண்டு இயற்கை யெய்தினர்.

முனிவர் தமிழ்-இலத்தீன் பாலமாக இயற்றி யுள்ள நூற்களைப் பற்றிய விவரங்கள் பின்னல்