பக்கம்:தமிழ் உரை நடை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடையில் ஒரு மைல் கல் 9 it கற்பு நிலையில் பரத்தையிற் பிரிந்த தலைவனே ஏற்றுக் கொள்ளும் தலைவியின் நிலையை உரையாசிரியர் உவமை முகத்தால் உணர்த்துவதும் அறிந்து மகிழற் பாலதாகும்: . 'அல்லது உம், வண்டோரனையர் ஆடவர்; பூவோ ரனையர் மகளிர்' என்பது: என்ன? வண்டுகள் தாதுTது மிடத்து, 'நன்மலரே ஊதுவோம்; அல்லாதது ஊதேம். என்ன: எல்லா மலரும் ஊதும்; இனிப் பூவாயினக்கால், எம்மையே ஊதா எல்லாப் பூவையும் ஊதின' என்று புலவா தன்றே? அதுபோலத் தலைமகனும் எல்லாப் பெண்களையும் தலைப்பெய்தற் றன்மையான்; அத் த ன் ைம அறிவான் போம் பொழுது புறந்தொழுது, வரும் பொழுது எதிர்தொழுது ஏற்றுக் கொண்டு வழிபடுவதல்லது மலைத்தற்கண்ணே மல்லேம்; மலைத்து இப்பெற்றிய மாதல் தலைமை யன்று.' (பக். 187) இவ்வாறு நூல் முழுவதும் பலப்பல உயரிய உதாரணங்களை எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். உரைத்திறன் ஆராய்ந்து அதன் நலக் கேடுகளைக் கூறு: படுத்துவது நம் நோக்கமன்று. அக்காலத்தில் வழங்கிய உரை நடை அமைப்பு இன்ன வகைத்து என்று காட்டுவதே. நாம் இங்கு மேற்கொண்டது. இவ்வுரைகள் அனைத்தும் எதுகை மோனை அமையப் பெற்றனவாய், அளபெடை அமைந்தனவாய், தொடர்ந்தனவாய்ச் செல்லுவதைக் காண்கின்ருேம். பாட்டாய் இல்லாவிடினும், சிலவிடங். களில் பாடற்சக்தம் பொருந்தியுள்ளமையைக் காண்கின் ருேம். காற் புள்ளி, அரைப் புள்ளி முதலியன பொருந்தப் பெரும் பெரு வாக்கியங்களாகவே இவ்வுரை நடை செல்வது நமக்கு நீண்ட அகவற் பாக்களே நினைவூட்டுகின்றதன்ருேl' மேலும், காற்புள்ளி இட்டும், புணர்ச்சி இலக்கணம். பொருந்தவும் வகையாக 'ப்' 'க்' முதலிய சந்தியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/100&oldid=874363" இலிருந்து மீள்விக்கப்பட்டது