பக்கம்:தமிழ் உரை நடை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘94 தமிழ் உரை நடை அக்கருத்துப் பொருந்தாது என்னலாம். நெடுமாறனைக் குறிக்கும் பாட்டில் அவன் நெல்வேலி வென்ருன் எனக் குறிக்கப்பெற்றுள்ளான். இது திட்டமாக ஏழாம் நூற் முண்டில் ஞானசம்பந்தர் காலத்து வாழ்ந்த கின்றசீர் நெடுமாறனைக் குறிக்கும் என்பது சுந்தரர் தேவாரத்தால் அறியலாம். பிற பெயர்கள் பற்றியும் அவ்வாறே. இதில் சத்துரு துரந்தரன் என்னும் பாண்டியன் பெயரும் குறிப் .பிடப் பெறுகின்றது. இவ்வடமொழிப் பெயர் சங்க காலத்தில் இல்லை; இக்கோவையில் பல போர்க்களங் கள் குறிக்கப் பெறுகின்றன. அவற்றுள் விழிஞம் (62), ஆற்றுக்குடி (43). கடையல் (41). கோடாற்று அரண் (88), வல்லம் (40), பூலங்தை (58), பாழி (29), கறை யாறு (59), வெண்மா (45), நெல்வேலி (53), சங்க மங்கை (205), செங்கிலம் (67), நெடுங்கடல் (189), குளங்தை (300) முதலியன முக்கிய இடம் பெறுகின்றன. இவை அனைத்திலும் பாண்டியன் ஒருவனே போரிட்டு வெற்றி கொண்டானே, அன்றி அவன் பரம்பரையில் பலர் கொண்ட வெற்றியை இவை குறிக்கின்றனவோ என்பது திட்டமாகத் தெரியவில்லை. எப்படியாயினும் சோழ பாண்டியரையும் சிற்றரசர் பிறரையும் தோற் கடித்துப் பெருமன்னகை வாழ்ந்தவன் இப்பாண்டிக் கோவைக்குத் தலைவன் என்பது தேற்றம். எனவே, வடக்கே பல்லவர் சிறந்தோங்கிய காலத்தில் தெற்கே பாண்டியர் கிலேயும் ஓங்கியிருந்தது என நாம் காண்கின்ற வரலாற்று நெறியில் கின்று காண்போமால்ை, நின்ற சீர் நெடுமாறன் காலத்தோ, சற்றுப் பின்னே எழுந்த இப் .பாண்டிக் கோவை அகப்பொருள் உரைக்கு எடுத்துக் T1. சுந்தரர் தேவாரம் திருத்தொண்டத்தொகை. நிறைகொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற கின்றசீர் நெடுமாறன் அடியார்க்கு மடியேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/103&oldid=874366" இலிருந்து மீள்விக்கப்பட்டது