பக்கம்:தமிழ் உரை நடை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ் உரை நடை இந்தப் பதிற்றுப்பத்தின் உரை சிறந்ததாயினும், அவ் வுரையாசிரியர் காலத்தால் பிந்தியவர் எனக் கொள்ளல் பொருந்தும். நேமிநாதர் காலம் இன்றைக்கு 800 ஆண்டு. களுக்கு முன்னது என அறிஞர் முடிவு செய்கின்றமையின், இவ்வுரையாசிரியரின் காலம் அதற்குப் பிந்தியதே எனக் கொள்வதில் தவருென்றுமில்லை. திருக்குறளுக்கும் பரிபாடலுக்கும் சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர். அவர் காஞ்சியில் தோன்றி. வாழ்ந்தவர் என்பதும், வைணவ குலத்தார் என்பதும் அறிய முடிகிறது. அவர் காலத்தை நச்சினர்க்கினியர் காலத் துக்கு முற்பட்டது என அறிஞர்கள் ஒருவாறு அறுதி யிட்டிருக்கிருர்கள். அவர் பதினேராம் நூற்ருண்டிற்கும் பதின்ைகாம் நூற்ருண்டிற்கும் இடைப்பட்டவர் என் பதைக் குறள் வெளியீட்டாளருள் ஒரு வ ர | ன வை. மு. சடகோப் ராமாநுசாசாரியார் அவர்கள் தம் முன்னுரையில் நன்கு எடுத்துக் காட்டுகின்ருர் பரி மேலழகர் போசராசன் காலத்துக்குப் பின்னவர் எனவும் உமாபதி சிவத்திற்கு முற்பட்டவராக இருக்கலாமோ எனவும் கூறி, சேவைரையர் காலத்தவர் என முடிக்கின்ருர், 'காமத்துப்பாலின் முதலில் இச்சிறப்புப் பற்றி வடநூலுட் போசராசனும்.....இதனையே மிகுத்துக் கூறினன்,' என்று போசராசனை மேற்கோள் காட்டி இருத்தலால், இவர் காலம் போசராசன் காலத்துக்குப்பின் என்பது தெளிவாகும். போசராச னுடைய காலம் பதினேராம் நூற்ருண்டென்பர். மேற்காட்டிய பாடல்களுள் வள்ளுவர் சீர்' என்ற பாடல், உமாபதிசிவாசாரியார் செய்ததென்பது நிச் சயமானல்-அவர் பதின்ைகாம் நூற்ருண்டில் இருந் 1. பத்துப்பாட்டு (ஐந்தாம் பதிப்பு) முன்னுரை, பக், xiii (டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/111&oldid=874375" இலிருந்து மீள்விக்கப்பட்டது