பக்கம்:தமிழ் உரை நடை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தமிழ் உரை நடை 'வைதிலேன்' என எதிர்மறைப் பொருள்பட வந்த வாறு கண்டு கொள்க. ' என்பதால் நன்கு உணரலாம். இவ்வாறு பல வகையில் சேனவரையர் உரைநடை சிறந்ததாகும். விரிப்பிற் பெருகும். மேலே தெய்வச்சிலையார் உரைநடையைக் காண்போம்: "அனைய மரபின என்றதனன், ஈண்டு ஒதப் பட்டனவற்றுள் அடையடுத்து வருவனவும் கொள்க. "தாழ் குழல்’ என்ற வழி அதனை உடையாட்குப் பெயராகி வருதலின், ஆகுபெய ராயிற்று இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகாதோ?’ எனின் ஆண்டு எடுத்து ஒதாமையினுைம், பொருள் ஒற்றுமைப்படுதலா னும் ஆகாது என்க." என்று சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியல் முப்பதாம் சூத்திரத்திற்குப் பொருள் கண்டு, ஐயமகற்றுகின்ருர். இன்னும் எடுத்த பொருளைத் திட்டமாக வரையறுத்து விளக்கும் பான்மையை உரியியல் 98-ஆம் சூத்திர உரையில் நன்கு காட்டுகிருர்: 'எனவே, காரணமுளதென்பதுTஉம், அது புலகைாதென்பது உம் கூறியவாரும். என்னை புல கைாமை?’ எனின், மிகுதல் என்பதற்குப் பொரு ளாவது, முன்பு நின்ற நிலையில் பெரிதாதல், அப் பொருளின்மையைச் சேரக் காட்டுதற்குக் காரணம் உரைப்ப தரிதாதலான். 'அஃதேல், காரண முள போலக் கூறியவதனுற் பய னென்ன?’ எனின், பொருண்மேற் சொல் நிகழ்தல் தொன்று தொட்டு நின்றதாதலின், உலகினுள் மிக்காரெல்லாம் காரண 1. கழகப் பதிப்பு பக். 153 2. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு, பக். 91.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/123&oldid=874388" இலிருந்து மீள்விக்கப்பட்டது