பக்கம்:தமிழ் உரை நடை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 117 வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம். கட லொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருள் உணர்த்தாமையானும், முற்கு, வீளை, இலதை முதலியன பொருளுணர்த்தினவேனும் எழுத்தாகா மையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினர். ஈண்டு உருவென்றது மனனுணர்வாய் நிற்கும் கருத்துப் பொருளே. அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடையெறியப் படுதலா ஆணும், இன்பதுன்பத்தை யாக்கலானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும், உந்தி முதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து, கட்புலனந் தன்மையின்றிச் செவிக்கட்சென்று உறும் ஊறுடை மையானும், விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மை உடைமையானும், காற்றின் குணமாவ தோர் உருவாம் வன்மை மென்மை இடைமை கோடாலானும் உருவே யாயிற்று. இதனைக் காற் றின் குணமே என்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின் குணமென்பாரும் உளர்.' என்று தொல்காப்பியப் பாயிரத்திலேயே எழுத்தின் தன்மை பற்றி விளக்கி, மேல் அவ்வெழுத்ததிகாரத்திற்குத் தெளிந்த நல்ல உரை எழுதிச் செல்லுகின்ருர். கச்சினர்க்கினியர் உவமையால் எடுத்ததை விளக்கும் திறனே மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் என்பதன் உரையில் கன்கு கண்டு கொள்ளலாம். 'இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத் திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந் தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாகவே நிற்கு 1. தொல். எழுத்து நச்சி: கழகப் பதிப்பு பக். 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/126&oldid=874391" இலிருந்து மீள்விக்கப்பட்டது