பக்கம்:தமிழ் உரை நடை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

硼24 தமிழ்உரை நடை 'இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப் படாமையின், அவிச்சையை இருள் என்றும், நல் வினையும் பிறந்தற் கேது வாகலான், இருவினையுஞ் சேரா என்றுங் கூறினர். இறைமைக் குணங்கள் இலராயினரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவுடைய இறைவன் புகழே "பொருள் சேர் புகழ்' எனப்பட்டது. புரிதல்-எப்பொழுதும் சொல்லுதல்.' எனச் சொற்குச் சொல் விளக்கம் தருதல் நன்கு விளங்கும். இனி, அதிகாரத் தலைப்பைக்கொண்டு, அதற்கு விளக்கந்தரும் வகையில் பல தலைப்புக்கள் நன்கு எடுத் தாளப் பெறுகின்றன. அவற்றுள் 'கள்ளாமைக்கு இவர் கொள்ளும் பொருள் காண்போம்: 'கள்ளாமை, அஃதாவது, பிறருடைமையா யிருப்ப தியாதொரு பொருளையும் அவரை வஞ் சித்துக் கொள்ளக் கருதாமை. கருதுதலும் செய்த லோடத்தலின் 'கள்ளாமை என்ருர். இல்வாழ் வார்க்காயின், தமரொடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள் களை அங்ங்ணம் கொள்ளினும் அமையும்; துறந்தார்க் காயின் அதனைக் க ரு தி ய வழியும் பெரிய தோரிழுக்காமாதலின், இது துறவறமாயிற்று. புறத்துப்போகாது மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே நோக்கற்பாலதாய அவர் மனம், அஃ தொழிந்து புறத்தே போந்து, பஃறலைப் பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலே யன்றி, அதுதன்னையும் வஞ்சித்துக் கொள்ளக் கருது தல் அவர்க்குப் பெரியதோரிழுக்காதல் அறிக. இவ் வாறு வாய்மை முதற் கொல்லாமை யிருய நான்கதி 1. திருக்குறள். கழகப் பதிப்பு, பக். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/133&oldid=874400" இலிருந்து மீள்விக்கப்பட்டது