பக்கம்:தமிழ் உரை நடை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தமிழ் உரை நடை அவற்றின் பொருள்களும் மாறுபட்டு நிற்கின்றன. அவற்றின் மாறுபாட்டையெல்லாம் நோக்கின், சிலவிடங் களில் இதுவும் தமிழ் மொழிதான என்ற ஐயங்கூடச் சில சமயங்களில் உண்டாகி விடும். இக்கல்வெட்டுக்களைப் படி எடுத்து, ஒழுங்குபடுத்தி, எழுத்துக்களைக் கோவைப்படுத்தி மற்றவர்களுக்கு விளங்க வைப்பதில் உள்ள தொல்லேயை அத்துறையில் பணியாற்றும் வல்லவர்களே உணர்வார்கள். சொற்கள் பிழைபடப் படியெடுக்கப் பெறின் உண்டாகும் பொருட்கேட்டையும், அதனல் விளையும் மாற்றங்களையும் கல்வெட்டுக்களை ஆராய்பவர் உணர்வர். அவை பற்றி யெல்லாம் சென்னை அரசாங்கக் கோயில் சாசனங்களை வெளியிட்டு முன்னுரை எழுதிய திரு. தி. நா. சுப்பிரமணியம் அவர்கள் நன்கு எடுத்துக் காட்டுகிருர்கள். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; பாடினவன் பாட்டைக் கெடுத்தான்." என்ற ஒரு முதுமொழி நாட்டில் உண்டு. அது போன்றே படி எடுப்பவர் சற்று வேறுபடினும், அதைப் படிப்பவர் மாறுபடினும் எல்லாம் கெடுதலாகவே முடியும். திரு. சுப்பிரமணியம் அவர்கள் காட்டும் இரண்டொரு மேற்கோற் களைக் காண்போம்: - "அவைகளை ஊன்றிக் கவனித்தால், ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். அவற்றைப் படித்துப் பிரதி செய்த வர்கள் சாசனங்களிலே பயின்று வந்த எழுத்துக்களையும் வாசகப் போக்கையும் நன்ருக அறிந்து, சரியாகவே படித்தி ருக்கிருர்கள் ஆல்ை, பிரதி செய்யும்போது மட்டும் அப்படியே எழுத்துக்கு எழுத்துச் சரியாகப் பிரதி செய்ய் வில்லை; தாங்கள் எழுதுகின்ற விதம் கொச்சையாகப் பல் பிழைகளுடன் பிரதி செய்திருக்கிருர்கள். உதாரணமாக 576ir, கடக்க என்பன போன் றவற்றை "ஞன் குல் ன்டக்க என்றெல்லாம் பிரதி செய்திருக்கிருர்கள். میت۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/139&oldid=874406" இலிருந்து மீள்விக்கப்பட்டது