பக்கம்:தமிழ் உரை நடை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் வெட்டுக்கள் 135 பல உண்மைகளே உலகுக்கு உணர்த்தி, தமிழ் நாட்டு வரலாற்றைத் தொடர்பு கெடாமல் வாழ வைக்கின்றன. நாம் அவை எவ்வாறு வரலாற்றுக்கு வழி காட்டியாக அமைகின்றன என்பதை இங்குக் காண வேண்டா: அவற்றின் உரைநடைப் போக்கு அமைந்த வகையையும் நிலையையுமே காணல் வேண்டும். கல்வெட்டுக்களின் முதற்பகுதிகள் மெய்க்கீர்த்திகளாய், அரசர்தம் புகழ் பரப்பும் அகவற் பாக்களில் அ ைமங் த ன எனக் கண்டோம். அப்பகுதி நமக்குத் தேவை இன்றேனும், தொடர்ந்து வரும் கிலேகாண ஒன்றைக் காட்டிப் பின் தொடரும் உரைநடையை நோக்குவோம். இராஜேந்திரன், குலோத்துங்கன் போன்ருர் மெய்க்கீர்த்திகள் மிக நீண்டு கிற்கின்றன. இராசராசன் மெய்க்கீர்த்திகளிலும் சில அத்தகையன. எனினும், நாம் இங்கு மிகச் சிறியதான இராசராசன் மெய்க்கீர்த்தி ஒன்றைக் காணல்ாம்: ஸ்வஸ்தி ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளுர்ச் சாலை கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்கை பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடுங் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழ மண் டலமும் இரட்ட பாடி ஏழரை இலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் எழில்வள ருழியு ளெல்லா யாண்டுங் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராச கேசரி வர்மரான உடையார் ரீ ராசராச தேவர்க்கு யாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/144&oldid=874412" இலிருந்து மீள்விக்கப்பட்டது