பக்கம்:தமிழ் உரை நடை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 137 மக்கள் பழக்க வழக்கங்களும், அரச ஆட்சி அமைப்பும், பிறவும் நன்கு விளங்குகின்றன. உரைநடை முன் கண்ட உரையாசிரியர்கள் உரை நடைக்குப் பெரிதும் மாறுபட் டிருப்பதைக் காண்கின்ருேம், பல வடமொழிச் சொற்களை இங்குப் பெய்து எழுதியிருக்கிருர்கள். எண்களை எழுதும் பழந்தமிழ் முறையும் அளவினைக் குறிக்கும் பல முறைகளும் நன்கு தெரிகின்றன. இந்தக் கல்வெட்டின் காலம் இராச ராசன் காலமாகும். இது கி. பி. 1014ல் பொறிக்கப்பெற்ற தென்பர். அந்த நூற்ருண்டு தொடங்கித்தான் மேலே கண்ட உரையாசிரியர் பலரும் தோன்றி இலக்கிய இலக்கணங்களுக்கு நல்ல உரைகளைக் கண்டுள்ளார்கள். எனினும், அந்த உரை நடைக்கும் இக் கல்வெட்டு உரை கடைக்கும் வேறுபாடு தெரிகின்றது. இவையெல்லாம் அரசர் இசைவு பெற்று வெட்டப்பட்டவை. எனவே, அவர்கள் இசைவில் வடமொழி மொழிக்கு அதிக ஆதிக்கம் இருந்து என அறிய வேண்டியுள்ளது. புலவர்கள் - மன்ன வருக்குத் தலை வணங்காத அறிவறிந்த புலவர்கள் - கால வெள்ளத்தாலும், அவ்வக்கால மொழி அமைப்பாலும் ஒரளவு பற்றப்பட்டவர்களே என்ருலும், அவர்களெல்லா ரும் தம் கருத்துப்படி வடமொழி அதிகம் கலவாத வகை .யிலேயே நல்ல தமிழில் உரையெழுதிச் சென்ருர்கள். இவ்வாறு ஒரே காலத்தில் இருவகை உரை கடைகளை நாம் காண முடிகின்றது. இதன் காரணத்தை அடுத்து வரும் அதிகாரங்களிற் காணலாம். இங்கு இன்னும் இரண்டொரு கல் வெட்டுக்களைக் கண்டு மேலே செல்லலாம்: "பூரீ திருபுவநச் சக்கிரவிற்த்திகள் பூரீ ராச ராசதேவருக்கு யாண்டு பதிருைவதற்கெதிராம் ஆண்டு நாள் இருநூற்றெழுபத்திரண்டு காங்கய ராயனும் திருமஞ்சனம் அழகியானும் தென்னவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/146&oldid=874414" இலிருந்து மீள்விக்கப்பட்டது