பக்கம்:தமிழ் உரை நடை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 145 கிளவியாவது, வடவெழுத்திற்கே உரியவெனப்படும் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொது வாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம், என விளக்கு கின்ருர். இந்தப் பொது எழுத்துக்கள் எவை எவை என்பதை நன்னூல் பதவியல் பத்தொன்பதாம் சூத்திரம் நன்கு விளக்குகிறது. இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சுஐ றருக்கும் முதல்.ஈறு அவ்வாதி நான்மைகள் அவ்வாகும் ஐயைம் பொதுவெழுத் தொழிந்த நாலேழும் திரியும் ' (நன் பத. 19) இவ்வாறு இரு மொழிக்கும் பொதுவாகிய எழுத்துக் களும், தமிழுக்கே உரிமையான சிறப்பெழுத்துக்களும் ஆரிய மொழிக்கே உரியவான சிறப்பெழுத்துக்களும் உள்ளன. பொது எழுத்துக்காயின் ஆரிய மொழிச்சொற் களே அப்படியே தமிழ் மொழி எழுத்துக்களாலமைத்துக் கொள்ளுதலும், பிறவாயின் திரித்து அமைத்துக் கொள் ளுதலும் முறையென்பதைத் தொல்காப்பியம், நன்னூல் என்ற இரண்டு இலக்கண நூல்களும் நன்கு எடுத்து விளக்குகின்றன. இவை உரைநடையில் பெரும்பாலும் பயின்ற வரும் என்பதையும், இவற்றைச் செய்யுளிடத் தும் ஏற்றுக்கொள்ளுதல் தவறு இல்லே என்பதையும் சேனவரையர் சிதைந்தன வரினும் இயைந்தன வரை யார், (எச்ச. 6) என்ற குத்திர உரையில் நன்கு காட்டி யுள்ளார். எனவே, உரைநடையில் ஆரிய மொழிச் சொற்கள் தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பெற்றுத் தொல்காப்பியர் காலந்தொட்டே தமிழில் பயின்று வந்தன என்று கொள்ளுதல் முறையாகும். . இனி, இவ்வடமொழிக் கலப்பு, காலக்தோறும் எவ் வாறு மாறியும், பிறழ்ந்தும், உறழ்ந்தும் வந்துள்ளது என்ப 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/154&oldid=874423" இலிருந்து மீள்விக்கப்பட்டது